"Mothers Day அன்னைக்கி இப்டி ஒரு சர்ப்ரைஸா??.." நெகிழ வைத்த விமானி மகன்.. கண்ணீர் விட்டு உருகிய நெட்டிசன்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த மே 8 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டிருந்தது. உலகில் உள்ள அனைவரும் தங்களின் தாய்க்காக, தங்களால் முடிந்த பரிசையோ அல்லது அன்பினை வெளிப்படுத்தியோ அந்த நாளை சிறந்ததாக மாற்றி கொண்டனர்.

Advertising
>
Advertising

Also Read | விக்கிப்பீடியாவில் 350 திருத்தங்கள்... "சென்னையில் நான் படிச்ச ஸ்கூல் இதாங்க" .. போட்டு உடைத்த 'கூகுள்' சுந்தர் பிச்சை..!

அந்த வகையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர், அன்னையர் தினத்தில் தனது தாய்க்காக செய்த செயல் ஒன்று, பலரையும் உருக வைத்துள்ளது.

24 வயதாகும் அமன் தாகூர் என்ற இளைஞர், இண்டிகோ விமானத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார்.

தாய்க்கு வேண்டி உருகிய விமானி

இவரது தாயும் அதே விமான நிறுவனத்தில் தான் விமானியாக பணிபுரிந்து வருகிறார். ஆனால், இருவரும் ஒன்றாக ஒரே விமானத்தில் பணிபுரிந்தது கிடையாது. அந்த வகையில், முதல் முறையாக தாய் - மகன் இணைந்து சக விமானிகளாக அன்னையர் தினத்தன்று பணிபுரிந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், தன்னுடைய தாய்க்காக நெகிழ்ச்சிமிக்க முறையில், அமன் தாகூர் கொடுத்த பேச்சும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சிறிய மரியாதை

கையில் பூங்கொத்துடன் விமானத்தில் என்ட்ரி கொடுத்த அமன் தாகூர், தனது அம்மாவை அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து பயணிகள் முன்பு பேசிய அவர், "அன்னையர் தினம் என்பது மிகவும் சிறப்பான நாள் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று, உங்களின் அம்மாவிடம் அன்பையும், மரியாதையையும் நீங்கள் செலுத்தி இருப்பீர்கள் என நம்புகிறேன். அப்படி, நானும் இந்த அன்னையர் தினத்தில் எனது அம்மாவுக்கு சிறிய மரியாதையை செய்ய விரும்புகிறேன்.

இது தான் ஃபர்ஸ்ட் டைம்

கடந்த 24 ஆண்டுகளில், எத்தனையோ விமானங்களில், பயணியாக எனது அம்மாவுடன் நான் பறந்து சென்றுள்ளேன். ஆனால், இன்று அவருடன் துணை பயணியாக நான் பணிபுரிய உள்ளது, இந்த நாளை சிறப்பான ஒன்றாக மாற்றி அமைக்கிறது. எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக என்னுடன் இருப்பதற்கும் மிக்க நன்றி" என அமன் தாகூர் தெரிவித்துள்ளார். உடனே அங்கிருந்த பயணிகள், கைதட்டி வாழ்த்தினை தெரிவித்தனர்.

இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், மொத்தமாக உருகி போயுள்ளனர். பலரும் இதனைக் கண்டு ஆனந்த கண்ணீர் விடும் நிலையில், இளம் வயதில் மகனின் செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து, அவரின் அம்மாவையும் வாழ்த்தி வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

INDIGO PLANE, MOTHER, SON, MOTHERS DAY, விமானி, இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்