‘பழைய நினைவுகளை மறந்த அம்மா’.. மகனின் 15 வருச ‘தவிப்பு’.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு ‘மெசேஜ்’!
முகப்பு > செய்திகள் > இந்தியா15 வருடங்களுக்கு முன் பிரிந்த சென்ற தாயை பேஸ்புக் உதவியோடு மகனுடன் சேர்த்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரமாதேவி. இவர் 15 வருடங்களுக்கு முன்னர் தனது கணவர் சவுத்ரியுடன் சண்டைபோட்டு பிரிந்து சென்றுவிட்டார். அப்போது அவரது மகன் மித்ரஜித்துக்கு 7 வயது. மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு சென்ற ரமாதேவி, வழக்கறிஞருக்கு படித்திருந்ததால் அந்தத் தொழிலை தொடங்கின. பாட்டியாலா பார் கவுன்சிலில் கிரிமினல் வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ரமாதேவி ஷிசோபெரனியா (Schizophrenia) என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு தான் யார் என்பதையே மறந்துவிட்டார். இதனால் அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் டெல்லியிலுள்ள ரஹாப் சென்டர்பார் ஹோப் (Rahab Center For Hope) என்ற என்ஜிஓ-க்கு மாற்றப்பட்டார். இந்த அமைப்பானது பெண்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில் 5 ஆண்டுகள் தங்கிய நிலையில் ரமாதேவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எழுதவும், பிடிக்கவும் தொடங்கினார்.
இந்த சமயத்தில்தான் தனது குடும்பம், மகன் போன்ற விவரங்களை காப்பக நிர்வாகிகளிடம் ரமாதேவி தெரிவித்துள்ளார். அப்போது தனது மகன் பெயர் மித்ரஜித் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து என்ஜிஓ நிறுவனர் யூனிஸ் ஸ்டீபன் ரமாதேவியை அவரது குடும்பத்தாரிடம் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பேஸ்புக் மூலம் ரமாதேவியின் மகன் மித்ரஜித்தை காப்பக நிர்வாகிகள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து கூறிய மகன் மித்ரஜித், ‘ஒருநாள் என் செல்போனுக்கு உங்களுக்கு ரமாதேவி சவுத்ரி என்ற உறவினர் யாராவது இருக்கிறார்களா என மெசேஜ் வந்தது. அதற்கு ஆம் என்று நான் பதில் அளித்தேன். அதன் பின்னர்தான் எனது தாய் உயிருடன் இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனே வீடியோ கால் மூலம் அம்மாவிடம் பேசினார். என்னால் அவரை சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணபுகைப்படத்தில் இருந்த தாயின் தோற்றம் வேறு மாதிரியாகவும், வீடியோகாலில் நான் பேசிய தாயின் தோற்றம் வேறு மாதிரியாக இருந்ததால் என்னால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது’ என கண்கலங்க கூறியுள்ளார். 15 வருடங்களுக்கு பிறகு தாயும், மகனும் பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
இந்திய ஐடி ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’.. H1B விசா விவகாரம்.. அமெரிக்க நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
தொடர்புடைய செய்திகள்
- 'ஃபங்கஷன் முடிஞ்ச உடனே 42 லட்சம் ரூபாய் மாயம்...' 'பணத்தை எடுத்தது வெளிய உள்ள ஆள் இல்ல...' - 4 வயது சிறுவன் மூலம் வெளிவந்த உண்மை...!
- 'நோயே பரவாதப்போ'... 'இதுமட்டும் எப்படி சாத்தியம்???'... 'அதுவும் பிறக்கும்போதே'... 'வியப்பில் மருத்துவர்கள்!!!'...
- 'இன்ஜீனியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி’... ‘இனி அவங்க, அவங்க தாய்மொழியிலேயே’... ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு’...!!!
- 'ஒரே ஒரு குழந்தை போதும்னு... அவசரப்பட்டு குடும்ப கட்டுப்பாடு செஞ்சுகிட்டேன்'!.. வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'அந்த' தருணம்!.. 43 வயதில் நடந்த அதிசயம்!!
- பேஸ்புக்கில் வந்த ஒரு ‘மெசேஜ்’.. நம்பி பேசிய ‘இளம்பெண்’.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
- 'ஹேப்பி தீபாவளி 2020!'.. பேஸ்புக்கின் ‘விர்ச்சுவல் தீபாவாளி கொண்டாட்டம்!’.. அசரவைக்கும் புதிய அம்சங்கள்!
- பேஸ்புக் காதலியை நேரில் பார்க்க ‘சர்ப்ரைஸ்’ கிப்ட்டுடன் போன இளைஞர்.. இப்டி நடக்கும்ன்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. காத்திருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..!
- VIDEO: 'கண்ணான கண்ணே... என் தோள் மீது சாய வா!'.. மகன் துபாயில்... அம்மா மலேசியாவில்... தவமாய் தவமிருந்து... மகனை மீட்டு எடுத்த... தாயின் பாசப் போராட்டம்!
- தலைவலி மாத்திரைன்னு தான் நெனச்சோம்.. ‘ஆனா..!’ பெற்ற ‘மகனால்’ நேர்ந்த கொடுமை.. கண்ணீர் மல்க பெற்றோர் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..!
- 19 வயசுல என் ‘அம்மா’ இங்க வந்தாங்க.. இந்த ஒரு விஷயத்தை முழுசா நம்புனாங்க.. கமலா ஹாரிஸ் உருக்கமாக சொன்ன தகவல்..!