'கொஞ்சம் கஷ்டமான முடிவு தான் இது' ... 'எல்லாரும் என்ன மன்னிச்சுக்கோங்க' ... ஊரடங்கிற்கு பின் முதல் முறையாக மோடி பேசியது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை சிரமப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டினுள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதும் சில பேர் எந்த தேவையுமில்லாமல் பொது வெளிகளில் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் வானொலி மூலம் உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி கூறுகையில், 'மக்களின் அன்றாட வாழ்வில் சிரமங்களை ஏற்படுத்தும் முடிவுகளை நான் எடுத்ததற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். கொரோனா பரவலுக்கு எதிரான போர் கடினமானது. அதனால் இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையுள்ளது. இந்த போராட்டம் வாழ்வா சாவா போன்றது. அதனால் இது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது' என்றார்.
இதுகுறித்து மோடி மேலும் கூறுகையில், 'கொரோனா நோயால் பாதிக்கப்படாமல் இருக்க தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை இந்தியா மேற்கொண்டு வருகிறது. செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் நாட்டிற்காக போராட வேண்டும். விதிகளை மீறி வீட்டைவிட்டு வெளியே நடமாடும் வரும் சிலரால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியாது' என்றார்.
கொரோனா வைரசிற்கு எதிரான இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அடையாளம் தெரியாத அவரதான் தேடிட்டு இருக்கோம்’... ‘லாக்டவுனுக்கு’ முன்... ‘வாடிக்கையாளர்’ கொடுத்து சென்ற ‘வேறலெவல்’ இன்ப ‘அதிர்ச்சி’...
- ‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...
- 'ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு' ... 'வாடகை ஒண்ணும் வேணாங்க' ... கோவை வீட்டு உரிமையாளரின் நெகிழ்ச்சி முடிவு!
- 'லாக்டவுனை' மீறி சுற்றித்திரிந்த 'இளைஞர்கள்..'. 'கேள்விகேட்ட' போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 'துப்பாக்கியால்' சுட்டுப்பிடித்த 'இன்ஸ்பெக்டர்...'
- 'என்னாது கொரோனாவோட காதலி பேரா' ... 'பரீட்சை வைப்பீங்கன்னு தெரிஞ்சுருந்தா வீட்லேயே இருந்திருப்போம்' ... கன்னியாகுமரி போலீசாரின் அசத்தல் தண்டனை!
- 'முகக்கவசம் இருந்தாலும் இப்படி கூட வைரஸ் பரவலாம்' ... மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?
- தந்தை ‘வெளியே’ அழைத்ததும்... ‘ஆசையாக’ கிளம்பிய ‘மகள்கள்’... ‘மனம்’ மாறி ‘காப்பாற்ற’ முயன்றும் நேர்ந்த ‘கொடூரம்’...
- ‘திருமண’ நாளன்று அதிர்ச்சியில் ‘உறைய’ வைத்த அழைப்பு... ‘வீடியோ’ காலில் பார்த்து ‘கதறிய’ மனைவி... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- 'ஹோட்டல் இல்லாதனால எச்சி இலையும் இல்ல' ... 'காலையில இருந்து யாரையும் காணோம்' ... ஊரடங்கால் தளர்ந்து போன ஆதரவற்றோர்!
- காசிக்கு 'ஆன்மீக சுற்றுலா' சென்ற சென்னைவாசிகள் ... 'ஊரடங்கு உத்தரவால்' திரும்பிவர சிக்கல் ... மத்திய அரசுக்கு கோரிக்கை!