நாட்டின் 'ஏழை' மக்கள் பசியால் வாடக்கூடாது... பிரதமர் 'மோடி' அறிவித்த 'திட்டம்'... முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இந்தியா - சீனா எல்லை பதற்றம் இருக்கும் வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடையே காணொளி மூலம் உரையாற்றினார்.
மோடி தனது உரையில், 'சரியான நேரத்தில் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அதே போல, கொரோனா மூலம் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா கொரோனா விஷயத்தில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது' என்றார்.
மேலும், 'பருவ மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், காய்ச்சல், சளி வரும் என்பதால் நாட்டு மக்கள் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும். முன்னதாக பொது முடக்கத்தை பல இடங்களில் ஒழுங்காக பின்பற்றவில்லை. நாம் இப்போது செய்யும் சிறிய தகவல்கள் நாளை மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தலாம். மாஸ்க் அணியாமல் அரசு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் கரீப் கல்யாண் திட்டம் குறித்து பேசிய மோடி, 'இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதற்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணஉதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். அதே போல நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு அடுத்த இலவச ரேஷன் பொருட்கள் சென்று சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இதன் மூலம் இலவசமாக நாடு மக்களுக்கு வழங்கப்படும். இதனால் நாட்டின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
கல்யாணமான ‘ஒரே’ வருஷத்தில் பிரிந்த தம்பதி.. ‘வித்தியாசமான’ காரணத்தை கூறி விவாகரத்து வாங்கிய கணவன்..!
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' படுத்துற பாட்டுல... இதயும் சேர்த்து 'நீங்க' அனுபவிக்கணும் பாத்துக்கோங்க... 'எச்சரிக்கும்' சீனா!
- 'மதுரை சலூன் கடைக்காரரை பாராட்டிய பிரதமர்...' 'என்கிட்ட உதவி கேட்டு வரவங்களுக்கு...' என் மனைவி நகையை வித்தாவது உதவுவேன்...!
- 'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல!
- “அடேய் பசங்களா.. என்னமா சந்தோஷம் தாண்டவம் ஆடுது!.. உங்களுக்காகவே அடுத்த லாக்டவுன் வரணும்!”.. உருகும் நெட்டிசன்கள்.. ட்ரெண்டிங்கில் #lockdown5!
- கொஞ்சம் 'பேக்ல' போய் 'யோசிச்சு' பாருங்க 'மோடிஜி'... 'தோற்றுப்போன' திட்டத்துக்கு '40 ஆயிரம் கோடி' ஒதுக்கிருக்கீங்க... 'டிவிட்டர் பதிவில் விமர்சித்த ராகுல்...'
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- 'ஊரடங்க நீட்டிக்குறது எல்லாம் ஓகே'... "ஆனா மக்கள் கேட்டத எப்போ சார் பண்ண போறீங்க?"... 'பிரதமரிடம்' கேள்விகளை அடுக்கிய 'ப. சிதம்பரம்'!
- 'முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனை நிறைவு...' 'ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்ததாக தகவல்...' 'அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட்...'
- இந்த 'ஏரியா'ல ஊரடங்க ஸ்டாப் பண்ணலாம் ... 'ஆட்டோக்கு' மட்டும் 'பெர்மிஷன்' ... ஐடியா சொல்லும் நிபுணர்கள்!
- "மோடி உண்மையில் பெரிய மனிதர் தான்..." நேற்று 'மிரட்டல்' விடுத்த 'ட்ரம்ப்'... இன்று 'திடீர் பாராட்டு'... 'எதற்காகத் தெரியுமா?'