'மேடம், இந்த போஸ் நல்லா இருக்கு, அப்படியே இருங்க'... 'திடீரென கதறி துடித்த மாடல்'...'கேமராவை' போட்டுவிட்டு ஓடிய போட்டோகிராபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வித்தியாசமான ஒரு போட்டோஷூட்க்கு ஆசைப்பட்ட மாடலின் நிலைமை தற்போது பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் அழகி Jessica Leidolph. இவர் கவர்ச்சியான போஸ்களை கொடுத்து அதன் மூலம் பிரபலமானவர். இவர் கிழக்கு ஜெர்மனியில் உள்ள Nebra என்ற நகரில் அமைந்துள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் விலங்குகளுடன் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்கச் சென்றுள்ளார்.

16 வயதான சிறுத்தை ஒன்றுடன் அவர் போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, கேமராமேன் அதனைத் தனது கேமராவில் எடுத்துக் கொண்டே இருந்தார். அப்போது போஸ் ஒன்றைக் கொடுக்க சொல்லிவிட்டு, தனது கேமரா லென்ஸை போட்டோ கிராபர் சரி செய்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென அந்த மாடலின் அலறல் சத்தம் கேட்டது.

என்னவென்று பார்ப்பதற்குள் Jessicaவோடு அமர்ந்திருந்த சிறுத்தை அவரை தாக்கி காயப்படுத்தியுள்ளது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அந்த குழுவிலிருந்த அனைவரும் சிதறி ஓடினார்கள். உடனே அந்த இடத்திற்கு வந்த விலங்குகள் காப்பக ஊழியர்கள் Jessica மீட்டு சிறுத்தையைக் கூண்டிற்குள் கொண்டு சென்று அடைத்தார்கள்.

சிறுத்தை தாக்கியதில் சுய நினைவிழந்து சரிந்த Jessica, உடனடியாக ஹெலிகொப்டர் ஒன்றில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சிறுத்தை Jessicaவின் காது, கன்னம் மற்றும் தலையைக் கடுமையாகத் தாக்கியிருந்தது.

இதனால் அவருக்கு முகத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தனது அழகால் மாடலாக ஜொலித்து நல்ல வருவாய் ஈட்டிவந்த Jessica இனிமேல் தழும்புகளுடன் வாழ வேண்டும் என்பதை நினைத்துக் கலங்கிப்போனார்.

இதற்கிடையில், அந்த விலங்குகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், அந்த காப்பகத்தின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். Jessica ஒருபக்கம் கவர்ச்சி மொடல் என்றாலும், மறுபக்கம் அவர் ஒரு விலங்குகள் நல ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்