Video: 'ஒரு பக்கம் பிடித்து இழுத்து வெளியேற்றம்'.. 'இன்னொரு பக்கம் அமரவைக்க முயற்சி!'.. துணை சபாநாயகருக்கு நடந்தது என்ன?.. ‘அமளி துமளி’ சம்பவம்!.. பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக சட்ட மன்ற மேலவை துணைத் தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா, தமது இருக்கையிலிருந்து இழுத்து  வெளியே தள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசுவதைத் தடை சட்டம சோதாவை கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க அரசு, நிறைவேற்றிய நிலையில், கர்நாடக சட்ட மேலவையில் பா.ஜ.கவுக்கு பலம் இல்லை என்பதால், தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. 14 மாத காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கட்சி கூட்டணி ஆட்சியிலிருந்த காலத்தில் சட்ட மேலவையின் அவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.பிரதாப் சந்திரஷெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல் துணைத் தலைவராக எஸ்.எல்.தர்மேகவுடா தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் பசுவதை தடைச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மேலவைத் தலைவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டுவருவதென பா.ஜ.க மேலவைச் செயலாளரிடம் புகார் மனுவை வழங்கியது.  இப்படி சட்டமேலவைத் தலைவர் மீதே கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால், அவை முடிவுகளில் மேலவைத் தலைவர் தலையிட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. இதனால்,  துணைத் தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா அவை முடிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக தள்ளி வைக்கப்பட்டிருந்த சட்ட மேலவை இன்று மீண்டும் கூடியதை அடுத்து, அவைத் தலைவர் இருக்கையில் துணைத் தலைவர் அமர்ந்தார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள்  அவரை இருக்கையில் இருந்து வெளியேறுமாறு கூறி அமளி செய்துகொண்டிருந்தனர். அத்துடன், சில காங்கிரஸ் உறுப்பினர்கள், இருக்கையிலிருந்து அவரை இழுத்து வம்படியாக வெளியேற்றினர். 

இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தள மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் அவரை இருக்கையில் அமர்த்த முயற்சித்தனர். இதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளும் கைலகலப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை சபாநாயகரை இருக்கையிலிருந்து இழுத்து வெளியே தள்ளி விட்ட சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 75 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மேல் சபையில் பா.ஜ.கவில் 31 பேரும், காங்கிரஸில் 29 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 14 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்