வீடியோ பரவியதால் என்ஜினியரை தோப்புகரணம் போடச் சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த எம்.எல்.ஏ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலை போடும் என்ஜினியரை எம்.எல்.ஏ ஒருவர் தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒடிசாவின் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ளது பாட்னாகர் நகர். இங்கு பிஜூ ஜனதா தள கட்சி பிரதிநிதியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர், சரோஜ் குமார் மேகர். வென்ற பிறகு தனது தொகுதிக்கு மக்களை பார்வையிட்டு குறைகளை கேட்டறிவதற்காகவும், அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றிய ஆய்வுக்காகவும் சென்றுள்ளார் சரோஜ் குமார். அதற்கென தனது தொகுதியான பாட்னாகருக்கு செல்லும்போது அவருடன் அரசு அதிகாரிகளும் சென்றனர்.

அப்போது அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்றதாக இருப்பதாகவும், அதனால் சாலை உடனே சீர்கெடத் தொடங்குவதாகவும் பொதுமக்கள் எம்.எல்.ஏ சரோஜ்குமாரிடம் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதைக் கேட்ட எம்.எல்.ஏ சரோஜ்குமார், தனது அருகில் நின்றுகொண்டிருந்த ஜூனியர் என்ஜினியரை தோப்புகரணம் போடச் சொல்லிக் கூறியுள்ளார். எம்.எல்.ஏவின் உத்தரவினை தட்டாமல், என்ஜினியரும் மக்களின் முன்னிலையில் தோப்புக்கரணம் போட்டுள்ளார். இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர்.

இதுபற்றி பேசிய எம்.எல்.ஏ சரோஜ்குமார், சாலையின் கட்டுமான அமைப்பு தரமற்று இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொறியாளரை அடிக்க முற்பட்டதாகவும், ஆனால் அதை, தான் தடுத்தபோது, அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி பொதுமக்கள் வலியுறுத்தியதால், தான் இத்தகைய உத்தரவினை இட்டதாகவும், தனக்கு வேறு வழி இல்லாததாகவும் கூறியவர் இவ்வாறு என்ஜினியருக்கு உத்தரவிட்டது தனக்கு வருத்தமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ROAD, PUNISHMENT, VIDEOVIRAL, ENGINEER, MLA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்