VIDEO : 'அவங்க' கிட்ட இருந்து யாரும் 'காய்கறி' வாங்காதீங்க... எம்.எல்.ஏ-வின் பேச்சால் 'புதிய' சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அத்தியவாசிய தேவைகளுக்கு அல்லாமல் பொது இடங்களில் நடமாடுவதை அதிகமாக தவிர்த்து வருகின்றனர்.
மக்களுக்கு அன்றாட வாழ்க்கைகளில் பயன்படும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் போன்றவற்றை மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் முஸ்லீம் மக்கள் நடத்தும் கடைகளில் செல்ல வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கூறியுள்ள தகவல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் திவாரி பேசிய இந்த வீடியோ தற்போது வெளியாகி மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எம்.எல்.ஏவின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த கருத்து குறித்து பேசிய சுரேஷ் திவாரி, தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் பங்கு குறித்து மக்கள் புகாரளித்ததாகவும், அதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் இதனை பரிந்துரை செய்ததாகவும் தற்போது விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறித்து சர்ச்சை கருத்தை பேசியதால் எம்.எல்.ஏவின் கருத்திற்கு நாடு முழுவதும் கண்டன அலைகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாத்தாவை அடக்கம் செய்ய 'குழி' தோண்டும்போது... 'பேரன்' சொன்ன ஒன்று... 'அடுத்து' காத்திருந்த 'பேரதிர்ச்சியால்' உறைந்து நிற்கும் 'நண்பர்கள்'...
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!
- ஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா?... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!
- ‘என் கணவர் முகத்தக்கூட பார்க்க முடியலையே’.. கதறியழுத மனைவி.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
- உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..!
- 'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி!
- ‘விஷம்’ குடித்து உயிருக்கு போராடிய பெண்.. மருத்துவமனைக்கு ‘தோளில்’ சுமந்து ஓடிய உறவினர்.. தருமபுரி அருகே நடந்த சோகம்..!
- நாளை முதல் எவை இயங்கும்? எவை இயங்காது?... மத்திய அரசு அறிவிப்பு!
- "ஆள்" நடமாட்டமுள்ள பகுதி... 'பட்டப்பகலில்' அடுத்தடுத்து கேட்ட 'துப்பாக்கி' சத்தம்... சுற்றி நின்று 'படம்பிடித்த' மக்கள்...மனதை உறைய வைக்கும் சம்பவம்!
- "புள்ளைக்கு என்னப்பா பேரு வைக்குறது?"... "இது கொரோனா 'சீசன்'ல"... நல்லா 'ட்ரெண்ட்' ஆகுற மாதிரி 'பெயர்' வைத்த பெற்றோர்!