'மோடி'யின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன 'ஸ்டாலின்'.. தன்னுடைய 'ட்விட்டர்' பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டது என்ன??..
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வரும் நிலையில், சுமார் 160 தொகுதிகள் வரை, ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, 130 தொகுதிகளுக்கு மேல், இதுவரை வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். நாட்டு நலனை மேம்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என மோடி, தனது ட்வீட்டில்.குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமரின் வாழ்த்துக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து, பதில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
அதில், 'உங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி. மாநிலத்தின் தேவையை நிறைவேற்ற, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதை எதிர்நோக்கியுள்ளேன். கூட்டாட்சி ஒத்துழைப்பு மூலம், கொரோனா தொற்றை வீழ்த்தி, வளர்ச்சி பாதையில் பயணிப்போம் என நம்புகிறேன்' என தனது பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னுடைய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்...! 'எல்லா மக்களும் திருப்தி அடையுற மாதிரி ஒரு ஆட்சியை கொடுக்கணும்...' - ரஜினிகாந்த் வாழ்த்து...!
- "நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.." ஸ்டாலினுக்கு 'வாழ்த்து' சொல்லி.. பிரதமர் 'மோடி' போட்ட 'ட்வீட்'!!
- ‘எத்தனை சோதனைகள், பழிச்சொற்கள், அவதூறுகள்..?’.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘முக்கிய’ அறிக்கை வெளியீடு..!
- ‘முறைக்கேடு நடப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டு’!.. ஒரு தொகுதியில் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..!
- திமுக தலைவருக்கு 'எனது' வாழ்த்துக்கள்...! ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த 'பாஜக' மத்திய அமைச்சர்...!
- 'முதல்' தேர்தலிலேயே அபார 'வெற்றி' பெற்ற உதயநிதி ஸ்டாலின்.. மறுகணமே ட்விட்டரில் வெளியிட்ட 'புகைப்படம்'.. வைரலாகும் 'ட்வீட்'!!
- கடைசியா 'இந்த தொகுதியில' திமுக ஜெயிச்சு 25 வருஷம் ஆச்சு...! - முதல் வெற்றியை பதிவு செய்த திமுக வேட்பாளர்...!
- தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!
- திமுக-அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை..? யாருக்கு முன்னிலை அதிகம்..? வெளியான விவரம்..!
- "வாழ்த்துக்கள் 'ஸ்டாலின்'ஜி.. நல்லபடியா 'ஆட்சி' அமைச்சு, 'பட்டை'ய கெளப்புங்க.." 'முதல்வர்' ஆவதற்கு முன்னரே வந்த அசத்தல் 'வாழ்த்து'!!