இங்க பாருங்க.. இதெல்லாம் வேற லெவல்.. நாட்டுக்கே ஒழுக்கத்தை கற்று கொடுத்த மிசோரம் மக்கள்.. வைரல் போட்டோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி: மிசோரம் மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் விதமாக சாலைகளில் மக்கள் வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து நிற்கும் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Unknown Number-ல் இருந்து வந்த மெசேஜ்.. ரிப்ளை செய்யாத 'டாக்டர்'.. அடுத்து போட்டோவுடன் இளம் பெண் அனுப்பிய மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன?

இந்தியாவில் தற்போது மக்கள் தொகைக்கு சரிபாதி விகிதமாக வாகனங்கள் பெருகி விட்டன. நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் தலைவலியாக இருக்கிறது. அதுவும்  மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசல்

இங்கு காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து வாகனங்களில் செல்வது என்பது இமயமலை சிகரத்தில் ஏறுவது போன்றதாகும். போக்குவரத்து நெரிசலுக்கு சிறிய மாநிலமான மிசோரமும் தப்பவில்லை. டிராபிக் காரணமாக சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்கும் ஒரு சில வாகன ஓட்டிகள் பொறுமையை இழந்து போக்குவரத்து விதிகளை மீறுவதால் கூடுதல் சிக்கல் உருவாகி விடுகிறது. 

ஆனந்த் மஹிந்திரா

என்னதான் சட்டம் இருந்தாலும், அபராதம் இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை ஒருபோதும் திருத்த முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து நாட்டுக்கே ஒழுக்கத்தை கற்று கொடுத்துள்ளனர் மிசோரம் மக்கள். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதாவது மிசோராமில் இருந்து எடுக்கப்பட்ட அந்த போட்டோ, டிராபிக் சிக்னலில் காத்திருக்கும் மக்கள் சாலையில் ஒருபுறம் பொறுமையாகக் காத்திருப்பதை காட்டுகிறது.அதே வேளையில் எதிர்புறம் வாகனங்கள் வரும் சாலை காலியாக உள்ளதும், சிக்னலில் காத்திருப்பவர்கள் யாரும் போக்குவரத்து விதிகளை மீறி அந்த சாலையில் செல்லவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

என்ன ஒரு அற்புதமான படம்

இந்த படத்தை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, மிசோரம் மக்களின் நல்லொழுக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.'' என்ன ஒரு அற்புதமான படம்; ஒரு வாகனம் கூட விதிகளை  மீறவில்லை. இந்த போட்டோ நமக்கு ஒரு வலுவான செய்தியுடன் நமக்கு உத்வேகம் தருகிறது'' என்று அவர் கூறியுள்ளார். மிசோரம் மக்களின் இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டின்சன்கள் இதற்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

துறைமுகத்தில் நின்ற 4.5 ஆயிரம் கோடி சொகுசு கப்பல்.. ஜெர்மனி அதிபர் எடுத்த அதிரடி முடிவு.. ரஷ்யாவுக்கு விழுந்த அடுத்த அடி..!

MIZORAM PEOPLE, TRAFFIC RULES, MORALITY, COUNTRY, டெல்லி, போக்குவரத்து விதி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்