'ஓட்டு போடுங்க'.. 'மறக்காம செல்ஃபி எடுங்க'.. '7000 ரூபாய் பரிசு வெல்லுங்க'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஓட்டுப் போட்ட மை விரலுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அனுப்பினால், பரிசுத் தொகை வழங்கப்படும் என மிசோரம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு சதவிகிதத்தை உயர்த்த மிசோரம் தேர்தல் ஆணையம் புதுவிதமான யுக்தியை செயல்படுத்தியுள்ளது.
இளம் வாக்காளர்களை கவரும் விதத்தில் செல்ஃபி பரிசுப் போட்டி ஒன்றை அம்மாநில தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிசோரம் மாநிலத்தில் நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துபவர் குழுவாகவோ, தனியாகவோ இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சில விதிகளையும் அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் வாக்கு செலுத்துவதற்கு முன் அதாவது வாக்கு செலுத்தும்போது வரிசையில் நிற்பது போன்ற ஒரு செல்ஃபி புகைப்படம், வாக்கு செலுத்தியப் பிறகு மை வைத்த விரலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒரு செல்ஃபி புகைப்படம். நல்ல வாசகம் அடங்கிய தலைப்பின் கீழ் அந்தப் புகைப்படங்களை #MizoramVotes - என்ற ஹாஷ்டேக் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுப்ப வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் 9089329312 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் அந்தப் புகைப்படத்தை நாளை மாலை 7 மணி வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக 7000 ரூபாயும், 2-வது மற்றும் 3-வது பரிசாக 3000 ரூபாயும், அத்துடன் வெற்றிப்பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!
- 'ராகுல் அப்படி பேசினது அயோக்கியத் தனம்.. வயநாடுக்கு ஓடிவந்தவரு'.. பாஜக வேட்பாளர் எச்.ராஜா! பிரத்யேக பேட்டி!
- ‘ஜல்லிக்கட்டுக்கு வந்த இளைஞர்கள் இந்த தேர்தலில் இத செய்யணும்’.. திருமுருகன் காந்தி ஆவேசம்!
- 'செல்ஃபி எடுக்க முயற்சித்த தொண்டர்'...'அன்புமணியின் ரியாக்ஷன்'...வைரலாகும் வீடியோ!
- 'யாருமே ஓட்டு கேட்டு வர்ல!'... ஒவ்வொரு வாக்கும் முக்கியமாக இருக்கும்போது இப்படி ஒரு கிராமமா?
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?
- ‘தேர்தல் டியூட்டி பயிற்சி’ வகுப்பின்போது நெஞ்சுவலியால் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!
- அரசியல் பதிவு போட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனையா?
- அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பிடித்த ஃபேவரைட் குடும்பம் இதுதான்.. ஏன் தெரியுமா?
- தேர்தல் 2019: முதல் ஓட்டுப் போட்டது யார்? எந்த மாநிலத்தில் பதிவானது தெரியுமா?