கோழிக்குஞ்சை காப்பாத்துங்க..6 வயது வைரல் சிறுவன்... பள்ளி நிர்வாகம் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோழிக்குஞ்சைக் காப்பாற்ற போராடிய 6 வயது சிறுவனுக்கு, பள்ளி நிர்வாகம் வீரன் என்ற பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 

மிசோரம் சாய்ரங் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு மீது ஏற்றியதும், பதறிப்போன அச்சிறுவன், அதனைக் காப்பாற்ற தனது தந்தையிடம் சென்று மருத்துவமனைக்கு வருமாறு கெஞ்சி அழைத்துள்ளான்.

ஆனால் 'நீயே தனியாக மருத்துவமனைக்குச் செல்' என்று அவனது தந்தை கூறியதும், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன், கோழிக்குஞ்சையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு, அந்தச்  சிறுவன்  சென்றுள்ளான். பின்னர் சிறிதுநேரம் கழித்து, மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த அச்சிறுவன் 100 ரூபாய் நோட்டுடன், மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல முயற்சி செய்துள்ளான்.

அப்போது சிறுவனைத் தடுத்த அவனது தந்தை, 'முன்பே கோழிக்குஞ்சு இறந்துவிட்டதாகவும், மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.  அப்போதுதான் அந்தச் சிறுவனுக்கு விவரம் புரிந்துள்ளது.

மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் வெகுளித்தனத்துடன் மனிதநேயம் நிறைத்த அச்சிறுவனை போட்டோ எடுத்துள்ளார். தற்போது டெரிக் என்ற சிறுவனின் அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளது.

MIZORAM, BOY, DEREK, INNOCENCE, EMPATHY, CHICKEN, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்