“காணாம போன அந்த ஆயிரக் கணக்கான பேருக்கும் நடந்தது இதான்!”.. உலுக்கிய கோத்தபய ராஜபக்சேவின் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஈழ- சிங்களப் போரில் காணமல் போன 1000க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துவிட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்புவில் நடந்த ஐ.நா பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஈழ- சிங்கள போரில் மாயமான ஈழ விடுதலை வீரர்கள் இறந்துவிட்டனர் என்றும், அவர்களில் பலரை புலிகள் தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்டதற்கு அவர்களின் குடும்பங்களே சான்று என்றும், ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாததால், அவர்கள் மாயமானதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு நடந்த ஈழ இறுப்போரில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் சிங்கள ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டதாக சர்வதேச தமிழ் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது இலங்கை அரசு, தனது அறிக்கையில், 30 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் நடந்த போரில் மாயமானவர்களுள் 20 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கான இறப்புச் சான்றிதழை விரைவில் அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

SRILANKA, GOTABAYARAJAPAKSA, WAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்