8 மாசத்துக்கு முன்னாடி காணாமல்போன பெற்றோரை இழந்த சிறுவன்.. மொத்த படையையும் இறக்கி கண்டுபிடிச்ச போலீஸ்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் பல கட்ட முயற்சிக்கு பிறகு தற்போது கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த தேடுதல் வேட்டை கடந்துவந்த பாதை பலரையும் திடுக்கிட செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | இது எப்படி இங்க வந்துச்சு.. அடர்ந்த காட்டுக்குள்ள நிற்கும் பிரம்மாண்ட விமானம்.. மேப்பை ஆராயும்போது தெரியவந்த விஷயம்.. வைரல் புகைப்படம்.!

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை அடுத்த லோனாவாலா என்னும் காடுகளுக்கு புகழ் பெற்ற இடத்தை சேர்ந்தவன் அந்த சிறுவன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அந்த சிறுவன் தனது அப்பா வழி அத்தை வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த அவர், முதலில் தனது பாட்டியின் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன் பிறகு மாமா வீட்டில் வசிக்க துவங்கிய நேரத்தில் தான் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

புகார்

இதனை தொடர்ந்து லோனாவாலா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீசார் சிறுவனை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். ஆரம்ப விசாரணை லோனாவாலா நகர காவல் நிலையத்தின் குழுவால் நடத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் புனே கிராமப்புற காவல்துறையின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு (AHTU) பரிந்துரைக்கப்பட்டது.

உள்ளூர் மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சிறுவனை கண்டறியமுடியாமல் தவித்துள்ளனர். அதன்பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து சிறுவன் இருக்கும் இடம் குறித்து புதிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி லோனாவாலா-வின் வேறு பகுதியில் இருந்த சிறுவனை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதன்பிறகு அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இதில் முன்னுக்குபின் முரணான பல தகவல்களை சிறுவன் கூறிய நிலையில், அதிகாரிகள் சிறுவனை சமாதனப்படுத்தவே உண்மையை கூறியிருக்கிறான். அதன்படி தனது மாமா மற்றும் அத்தை தன்னை தாக்கியதாகவும் அதனாலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்திருக்கின்றான். ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் தானேவில் உள்ள பத்லாபூருக்கு சென்ற சிறுவன் அங்குள்ள சிறிய கடை ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறான். அதன்பிறகு மீண்டும் லோனாவாலா பகுதிக்கு திரும்பிய சில நாட்களிலேயே சிறுவனை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

பாராட்டு

சிறுவனுக்கு இப்போது ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அங்கு அவனது வழக்கு விசாரிக்கப்பட்டு, அவனது எதிர்கால வாழ்க்கை ஏற்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 மாத காலமாக பல்வேறு தடயங்களை சேகரித்து தொடர் தேடுதல் பணியை நடத்தி இறுதியில் சிறுவனை கண்டறிந்த காவத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!

POLICE, BOY, MISSING BOY, LONAVALA POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்