‘புதருக்குள் சடலம்’!.. ‘உடல் முழுவதும் காயம்’!.. ‘அருகில் கிடந்த ஆணின் பேண்ட், செருப்பு’!.. கழிப்பறைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் நபரங்கபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றுள்ளது. ஊர் மக்கள் அனைவரும் திருவிழாவில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். அப்போது இயற்கை உபாதையைக் கழிக்க சென்ற 16 வயது சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். முதலில் சிறுமியின் குடும்பத்தினர் திருவிழா பார்க்க சென்றிருக்கலாம் என எண்ணியுள்ளனர். ஆனால் இரவு 8 மணியை கடந்தும் சிறுமி வீடு திரும்பாததால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் எங்குதேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் புதரில் சிறுமி சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் சடலம் கிடந்த இடத்தில் ஆண்கள் அணியும் இரண்டு பேண்ட் மற்றும் செருப்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் கூலி வேலை செய்வதால் படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
'கையில் டாட்டூ.. ஆண் வேடத்தில் வீடியோ!'.. கணவரை உதறிவிட்டு, டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி!
தொடர்புடைய செய்திகள்
- ‘பேனாவுக்காக தோழியை கொலை செய்த பள்ளி மாணவி’!.. ‘விசாரணையில் சிக்கிய பெற்றோர்’.. பகீர் சம்பவம்..!
- VIDEO: ‘அசுர வேகத்தில் பைக் மீது மோதிய கார்’! காருக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்’.. பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’!.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..!
- ‘திடீரென எழும்பிய ராட்ஷத அலை’!.. நண்பர்கள் கண்முன்னே கடலுக்குள் மூழ்கிய கல்லூரி மாணவர்..! அதிர்ச்சி சம்பவம்..!
- தகாத உறவு... பாலியல் 'வன்கொடுமை'... பெண் கொலையில் 'திடுக்கிடும்' திருப்பம்!
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- 'கையில ஆசிட் இருக்கு'...'பொண்ண என்னோட அனுப்பு'...'பாட்டிக்கு நடந்த கொடூரம்'...பகீர் வீடியோ!
- வாலிபரிடம் இருந்து 'இரண்டரை' லட்சம்... ஆபாச 'வீடியோக்கள்' பறிமுதல்... கைது 'வேட்டை' தொடரும்!
- 'பாசிப்பயறு' பறிக்கச்சென்ற பெண்... 'சோளக்காட்டில்' சடலமாக கிடந்த அவலம்... 'பாலியல்' வன்கொடுமையா?
- ‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்!