‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த 23 -ம் தேதி இரவு இப்பெண் இருந்த வார்ட்டுக்கு வந்த வார்ட் பாய் சிவானந்தன் என்பவர் ‘உங்களுக்கு ஊசி போட வேண்டும், அதனால் கீழே உள்ள ரூம்முக்கு வாருங்கள்’ என அழைத்துள்ளார். உடனே அப்பெண் தனது அம்மாவை உடன் அழைத்து வருகிறேன் என கூறியுள்ளார்.
அதற்கு சிவானந்தன் ‘அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என கூறி அப்பெண்ணை கீழே அழைத்து சென்றுள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு மாத்திரை ஒன்றை சாப்பிட கொடுத்துள்ளார். இதனால் அப்பெண் அங்கே மயக்கம் அடைந்துள்ளார். இதனை அடுத்து சிவானந்தன், மருத்துவமனை ஊழியர் விஷால் என்பவருடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்தப்பின் தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு சிவானந்தன் மற்றும் விஷால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..
- ‘சத்துள்ள மதிய உணவு வழங்குவதாகக் கூறி’.. பள்ளி செய்த காரியம்.. ‘வீடியோ வெளியானதால் உண்மை தெரியவந்த அவலம்’..
- 'மருத்துவமனையில்' இறந்துபோன '4 வயது மகள்'.. 'பிரேதத்தை'.. பெற்றுக்கொள்ளாமல் தப்பியோடிய பெற்றோர்.. பரபரப்பு சம்பவம்!
- 'எம் மகள் இதனாலதான் இப்படி பண்ணிட்டா'.. 'பள்ளி மாணவியின்' விபரீத முடிவு.. தாய் சொல்லும் காரணம்!
- 'இதனாலதான் அப்பா பிரிஞ்சு போனார்'.. '17 வயது மகளுக்கு.. 'தாய் இழைத்த கொடூரம்'.. சிக்கவைத்த மகள்!
- ‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு’... ‘இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்’!
- ‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!
- ‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’... 'நம்பிஅனுப்பிய மாணவியிடம்'... 'உறவினர் செய்த பகீர் காரியம்'!
- 'இவங்கள நியாபகம் இருக்கா?.. 'ஆமாம் அவிங்களேதான்'.. வைரலாகும் ஒரே மருத்துவமனையின் 9 நர்ஸ்கள்!'