பரவலாகி வரும் கொரோனா வைரஸ் ... 'தாஜ்மஹால்' க்ளோஸ் ... மத்திய சுற்றுலா அமைச்சகம் எடுத்த முடிவு !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் அச்சம் இந்தியா முழுவதுமுள்ள நிலையில் முக்கிய சுற்றுலா தலமான தாஜ்மஹால் வரும் 31 - ம் தேதி வரை மூடவுள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சுமார் 130 பேர் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கும், ஆட்கள் கூடும் நிகழ்ச்சிகளான திருமணம் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் மிக முக்கிய சுற்றுலா தலமான தாஜ்மஹால் இந்த மாதம் இறுதி வரை மூடப்படவுள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் சில பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAJMAHAL, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்