இது ஓவியமோ, ஃபோட்டோஷாப்போ கெடையாது, ஒர்ஜினல்... 'இந்தியா'ல இப்படி ஒண்ணா...? - வைரலாகும் போட்டோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆற்றில் படகு ஒன்று செல்வது போன்ற ஒரு அழகிய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய அரசின் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆற்றில் படகு மிதப்பது  போன்று பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஏனென்றால் இந்த புகைப்படத்தில் இருக்கும் படகு பார்ப்பதற்கு வானத்தில் மிதப்பது போல இருக்கிறது. இதற்கு காரணம் அந்த ஆற்றுநீர் வானத்தை பிரதிபலிக்கும் விதமாக சுத்தமாக உள்ளது.

அதோடு தீவுகளில் இருக்கும் கடலில் தரை தெரிவது போல அந்த ஆற்றின் அடியில் உள்ள தாவரங்கள், கற்கள் ஆகியவை கண்ணாடி மூலம் பார்ப்பது போல தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.

இந்த ட்விட்டர் பதிவில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாவது, 'மேகாலயா மாநிலத்தில் ஓடும் உம்காட் ஆற்றில்தான் இந்தப் படகு செல்கிறது. தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆறு, உலகிலேயே சுத்தமான ஆறுகளில் ஒன்றாக திகழ்கிறது.

இதை சுத்தமாக வைத்திருக்கும் மேகாலயா மக்களுக்கு நன்றி. நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளும் இதுபோன்றே சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். மேகாலயா மக்களுக்கு தலை வணங்குகிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய ஜல் சக்தி அமைச்சகம் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதோடு, 3 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

CLEAN RIVER, PHOTO, JAL SHAKTI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்