'ராஜஸ்தானை' துவம்சம் செய்யும் 'வெட்டுக்கிளிகள்...' 'லட்சக்கணக்கில்' போர்வை போல் 'படந்திருக்கும் காட்சி...' 'சில்லிட வைக்கும் வீடியோ...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertising
Advertising

உணவுப் பயிர்களை அழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என ஐநா அமைப்பு சில வாரங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தது.

இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தற்போது கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என ஐநா அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி கீத் கிரெஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இதற்கேற்ப ராஜஸ்தான் மாநிலத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் திடீரென் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஜெய்ப்பூரில் கால்வைக்க இடம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் போர்வை போர்த்தியது போல் படந்திருக்கின்றன.

 

வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் மாவட்ட மக்கள், வெட்டுக்கிளிகளால் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்