VIDEO: நெசமாவே தோட்டத்துல இருந்து பால் வந்ததா..? ‘கூட்டம்கூட்டமாக படையெடுத்த மக்கள்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விவசாய நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் பால் வண்ண தண்ணீர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கிரந்திவேமுலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சிவா. இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கம்போல் வெங்கட சிவா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டர் போட்டுள்ளார். அப்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் வண்ண தண்ணீர் வந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து விவசாயத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியான தண்ணீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவல் வெளியானதும் வெங்கட சிவாவின் வயலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளனர்.

தமிழில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘கலகலப்பு’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவையாக தோட்டத்தில் இருந்து பால் வரும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல் ஆந்திராவில்  விவசாயி ஒருவரின் வயலில் பால் போன்ற தண்ணீர் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

VIRAL, FARMER, MILKWATER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்