'சொல்ற காசு குடுத்தா சொந்த ஊர் போலாம்' ... 'சட்டவிரோதமாக லாரிகளில் பயணம்' ... ஒரு நபருக்கு வசூலித்த தொகை இத்தனை ஆயிரமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகூலி தொழிலாளர்களை காய்கறி ஏற்றி செல்லும் லாரிகளில் மறைத்து வைத்து சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் தகவல் டெல்லி போலீசார் சோதனையில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் வேலை செய்து வரும் தினசரி கூலி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்து மற்றும் ரெயில் வசதி ஒன்றும் இல்லாத காரணத்தால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக டெல்லியில் பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து வருகின்றனர். இந்நிலையில் இதனைப் பயன்படுத்தி டெல்லியிலிருந்து வேறு மாநிலங்களுக்கு காய்கறி பொருட்களை ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் தொழிலாளர்களை வண்டிகளில் மறைத்து வைத்து மற்ற மாநிலங்களில் கொண்டு சேர்ப்பதாக டெல்லி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், 'காய்கறி ஏற்றி செல்லும் இரண்டு லாரிகளில் சோதனை நடத்திய போது குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் சட்டவிரோதமாக லாரிகளில் மறைத்து வைத்து கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது. இதற்காக ஒரு நபருக்கு சுமார் 5,000 முதல் 10,000 வரை லாரி ஓட்டுனர்கள் வசூல் செய்துள்ளனர். காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல அனுமதியுள்ளதால் இந்த சட்டவிரோதமான செயலில் ஓட்டுனர்கள் ஈடுபட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குற்றத்தை கண்டுப்பிடிப்பதற்கான நேரம் இதுவல்ல’... ‘தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்’... மத்திய சுகாதாரத் துறை கருத்து!
- 'கொரோனா' அச்சத்தில்... 'ஊர்' திரும்பியவர்கள் பற்றி 'தகவல்' கொடுத்ததால்... 'இளைஞருக்கு' நேர்ந்த 'விபரீதம்'... 'பதறவைக்கும்' சம்பவம்...
- '1,131 பேர்' தமிழகத்துக்கு 'வந்துள்ளனர்'... '515 பேர்' மட்டும் 'அடையாளம்' காணப்பட்டுள்ளனர்... 'மீதம் உள்ளவர்கள்...' 'ப்ளீஸ் நீங்களாகவே வந்துருங்க...' 'சுகாதாரத்துறை வேண்டுகோள்...'
- நீங்கள் TABLIGHI JAMAAT-ன் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவரா? ... கலந்து கொண்டவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களா ? ... அப்படின்னா இந்த செய்தியை உடனே செக் பண்ணுங்க!
- ‘பிரசவ வலியில் துடித்த இளம் பெண்’... ‘வெகுநேரமாகியும் கிடைக்காத ஆம்புலன்ஸ்’... ‘போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்த குடும்பத்தினர்’... 'நெகிழ வைத்த காவலர்கள்'!
- '2000 பேர்' பங்கேற்ற 'மத நிகழ்ச்சி'... '200' பேருக்கு 'வைரஸ் தொற்று'... 'தமிழகத்திலிருந்து' பங்கேற்ற '82 பேருக்கு' அறிகுறி...
- ‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’!
- 'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'
- 'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்!
- ‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..!