‘கணுக்கால் முறிவு’!.. ‘இன்னும் 240 கிமீ இருக்கு’.. ‘எனக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவால் கால் முறிவுடன் இளைஞர் ஒருவர் 24 கிலோமீட்டர் நடந்தே ஊருக்கு செல்ல முடிவெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த பன்வர்லால் என்ற இளைஞர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிபாரியா நகரில் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பன்வர்லாலின் கால் விரல்கள் மற்றும் கணுக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கணுக்காலில் மாவுக்கட்டு போட்டு பன்வரலால் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்த அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதிகள் இல்லை. அதனால் நடந்தே ஊருக்கு செல்வது என முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து NDTV ஊடகத்திடம் பேசிய பன்வர்லால், ‘நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு வாகனத்தில் வந்தேன். சொந்த ஊருக்கு செல்ல மீதமுள்ள 240 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவெடுத்துள்ளேன். பாதுகாப்பு காரணங்களுக்காக மாநில எல்லையில் போலீசார் என்னை தடுத்து நிறுத்துவார்கள் என எனக்கு தெரியும். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் குடும்பத்தினர் அங்கு தனியாக இருக்கிறார்கள். எனக்கு வேலையும் இல்லை. அதனால் அவர்களுக்கு பணமும் அனுப்ப முடியாது. வேறுவழியில்லாமல் என் காலில் உள்ள மாவுக்கட்டை அவிழ்த்துவிட்டு நடக்க தொடங்கியுள்ளேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லாக் டவுன் தொடருமா?'... ஏப்ரல் 14க்கு பிறகு என்ன செய்யப்போகிறது அரசு?... கொரோனாவை ஒழிக்க... ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!
- 'ரோடு க்ளோஸ் பண்ணா என்ன' ... 'இதெல்லாம் எங்கள ஒண்ணும் பண்ணாது' ... எல்லைகள் கடந்து ஈர்த்த முதுமைக் காதல்!
- 'பாகிஸ்தான்' ஊடகங்களாலேயே... 'பொறுத்துக்' கொள்ள 'முடியவில்லை'... 'சரியா பேசுங்க இம்ரான்...' 'திருத்திய பத்திரிகையாளர்கள்...'
- 'தனிமைப்படுத்தப்பட்டவங்க எந்த ஏரியால இருக்காங்கனு தெரிஞ்சுக்கணுமா? ... சென்னை மாநகராட்சியின் சூப்பர் முயற்சி!
- வெளில போய்ட்டு 'வீட்டுக்குள்ள' வர்றீங்களா?... கட்டாயம் இதெல்லாம் 'பாலோ' பண்ணுங்க!
- 1 ரூபாய்க்கு ‘சானிடைசர்’ பாக்கெட்.. அசத்திய பிரபல நிறுவனம்.. எங்கெல்லாம் கிடைக்கும்..?
- 'மச்சான் டயர் பஞ்சர் ஆயிடுச்சு'... 'பைக்கை ஓரமா ஒதுக்கு டா'... அடுத்த கணம் காத்திருந்த பயங்கரம்!
- 'வெளிநாடு சென்று வந்த ஊழியர்களை தனிமைப்படுத்தாமல்'... 'அப்படியே அனுமதித்த தனியார் நிறுவனம்’... ‘22 பேருக்கு கொரோனா பரவியதால்’... ‘சீல் வைத்த அதிகாரிகள்’!
- ஸ்மார்ட் போன்களில் 'கொரோனா' வைரஸ்... எத்தனை நாட்கள் 'உயிர்' வாழும்?... 'புதிய' தகவல்!
- "மலிவு விலையில் மருந்து கிடைக்கும்..." "விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்..." 'பிரபல' தனியார் நிறுவனம் 'உறுதி...'