'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது கணவன் வருவார் என 3 குழந்தைகளுடன் மனைவி காத்திருந்த நிலையில், இறந்த நிலையில் கணவனின் உடல் வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலை நிமித்தமாக தங்களது சொந்த ஊரை விட்டு மற்ற மாநிலங்களுக்கு வேலைக்காக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு குடும்பத்துடன் நடந்தே செல்கின்றனர்.
இந்நிலையில் சகீர் அன்சாரி என்ற 26 வயது இளைஞர், டெல்லியில் இருந்து 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பீகாருக்கு, தனது ஏழு நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். கடந்த மே 5ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இவர்களால் லக்னோவை மட்டுமே அடைய முடிந்தது. இதையடுத்து களைப்படைந்த நண்பர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை காலை 10 அளவில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அன்சாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்சாரியின் நண்பர்கள் மரத்தின் நடுவே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பினார்கள். இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணம் வசூலித்து ஆம்புலன்சில் அன்சாரியின் உடலை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது கணவனை காண3 குழந்தைகளுடன் வீட்டில் காத்துக்கொண்டிருந்த அன்சாரியின் மனைவி, சவப்பெட்டியில் கணவன் வந்ததை பார்த்து கதறி அழுதார். கொரோனா நேரடியாக பல பாதிப்புகளை பலரது வாழ்க்கையில் ஏற்படுத்தியிருந்தாலும், இதுபோன்று அன்றாடம் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் பல ரணமான சோகங்களை தினம் தினம் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இதுக்கெல்லாம் சீனாகிட்ட போகணுமா?".. "ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்!".. இந்திய மருத்துவர்கள் சாதனை!
- 'எங்கள நோட் பண்ணி திருடுறதே வேலையாப் போச்சு’... ‘இந்த சீனாவுக்கு’... ‘புது குண்டை தூக்கிப் போடும் அமெரிக்கா’!
- இந்த இக்கட்டான நேரத்துலையும் ‘வேறலெவல்’ பண்ணிட்டீங்க.. திரும்பி பார்க்க வைத்த ‘கேரளா’.. குவியும் பாராட்டு..!
- ‘சிறப்பாக கையாண்டு’... ‘கொரோனாவை ஓடவிட்ட 5 மாநிலங்கள்’... ‘அவுங்ககிட்ட இருந்து பாடம் கத்துக்கனும்’...
- '3 வருஷ லவ் சார்'... 'கல்யாணத்துக்கு கால் டாக்ஸி டிரைவர் போட்ட பட்ஜெட்' ... அசந்து போன சொந்தக்காரர்கள்!
- ‘80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை’... ‘புரட்டி போடும் கொரோனாவுக்கு மத்தியில்’... ‘ஆசுவாசப்படுத்திய செய்தி’!
- 4 ஆயிரத்தை 'நெருங்கும்' எண்ணிக்கை... பாதிப்பு 600ஐத் 'தாண்டிய' மண்டலங்கள்... 'சென்னை' கொரோனா நிலவரம்...
- 'சென்னை மக்களே இந்த மேம்பாலதை மறக்க முடியுமா'... '87 வருஷம் பழசு'... ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் இடிக்கப்பட்ட மேம்பாலம்!
- 'பிரசவ அறையில் இருந்த மனைவியை'... 'பார்க்க துடித்த கணவர்'... 'அனுமதிக்காத டாக்டருக்கு நிகழ்ந்த நடுங்க வைக்கும் பயங்கரம்'!
- 'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...