எப்படி ஒவ்வொரு உடலையும் 'அடையாளம்' கண்டுபிடிச்சாங்க...? - பரபரப்பு தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நபர்களின் உடற்பகுதிகள் தீவிர சோதனைக்கு பின் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி குன்னூர் பகுதியில் விபத்தில் சிக்கி வெடித்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி நீண்ட தேடுதல் வேட்கைக்கு பின் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 4 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விபத்து குறித்து புதிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஹெலிகாப்டர் விபத்து நடந்த காட்டேரி பகுதியில் சம்பவ இடத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 4 பேரில் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நேற்று 80% தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதோடு, சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் இருந்த நிலையில் 4 பேரின் உடல்கள் சிதறி இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. தற்போது அந்த உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டதால் உடல்களை அடையாளம் காண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே எலும்புகளை வைத்து ஆண் மற்றும் பெண் என உடல்கள் அடையாளம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர்கள் 'ஆக்சிடன்ட்' ஆகுறது இது 'முதல்' தடவ இல்ல...! - வெளிவந்துள்ள பல 'ஷாக்' தகவல்கள்...!
- இதுக்கு முன்னால 'யாரெல்லாம்' ஹெலிகாப்டர் விபத்துல இறந்துருக்காங்க...? - முழு விபரம்...!
- பிபின் ராவத் உள்பட '13 பேரை' பலி கொண்ட விபத்து 'நடந்தது' எப்படி? கருப்புப் பெட்டியில் மறைந்திருக்கும் உண்மை!
- ‘அப்பா பணியாற்றிய அதே பிரிவு’.. முதல் முப்படை தலைமை தளபதி.. மறைந்த பிபின் ராவத்தின் பின்னணி என்ன..?
- முப்படை தலைமை தளபதி ‘பிபின் ராவத்’ மரணம்.. ராணுவத் தளத்தின் வருகை பதிவேட்டியில் ‘முதல்வர்’ எழுதிய உருக்கமான இரங்கல் பதிவு..!
- ‘கடைசியா ஊருக்கு வந்தது அன்னைக்குதான்’.. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி.. வெளியான உருக்கமான தகவல்..!
- ‘அப்போ நூலிழையில் உயிர் தப்பினார்’.. இதேபோல் முன்பு ஒரு முறை ‘ஹெலிகாப்டர்’ விபத்தில் சிக்கிய பிபின் ராவத்..!
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. ‘Mayday Call’ கொடுத்தாரா விமானி..?
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் இவர் தான்! என்ன நடந்தது?
- ராணுவ ஹெலிகாப்ட்டர் விபத்து: முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு