வானத்தில் இருந்து விழுந்த மர்ம உலோக பந்து.. “இது அவங்களோட ராக்கெட்டா தான் இருக்கும்”.. நிபுணர்கள் பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் குறித்து நிபுணர்கள் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு வானத்தில் இருந்து நான்கு உருண்டை உலோகப் பந்துகள் விழுந்தன. சுமார் 1.5 அடி விட்டம் கொண்ட வெற்று உலோகக் பந்துகள் ஆனந்த் மாவட்டத்தின் டாக்ஜிபுரா, கம்போலாஜ் மற்றும் ராம்புரா கிராமங்களிலும், அண்டை மாவட்டமான கெடா மாவட்டத்தின் பூமெல் கிராமத்திலும் விழுந்ததது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தெரிவித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.டி. ஜடேஜா, ‘எங்கள் முதன்மை பகுப்பாய்வு இந்த உலோக பந்துகள் செயற்கைக்கோளின் பாகங்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை அணுக முடிவு செய்துள்ளோம்’ என கூறினார்.

இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த வானியலாளர் ஜோனதன் மெக்டொவல் இதுகுறித்து டுவீட் செய்திருந்தார். அதில், இந்த உலோகக் கோளங்கள் பொதுவாக CZ 3B என அழைக்கப்படும், சாங் ஜெங் 3B என்ற சீன ராக்கெட்டின் சிதைவுகளாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பிஎஸ் பாட்டியா கூறுகையில், ‘இந்த உலோகப் பந்துகள், ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களில் உள்ள திரவ எரிபொருளான ஹைட்ரஜனை சேமிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் கலன்களாக இருக்கலாம். வழக்கமாக, ராக்கெட்டில் உள்ள வெற்று சேமிப்பு கலன்கள் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த பிறகு தானாகவே பிரிந்து தரையில் விழும் வகையில் வடிவமைக்கப்படும்’ என கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்:
http://behindwoods.com/bgm8

METAL BALLS, GUJARAT, CHINESE ROCKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்