ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோரோனா வைரஸால் அதிகமாக யாரெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோரோனா வைரஸால் அதிகமாக யாரெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள இயக்குநர் ரன்தீப் குலேரியா, “உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வைரஸின் குறிப்பிட்ட மரபணுவின் அடுக்கு மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியிடம் இல்லை. இந்த கொரோனா வைரஸின் மரபணு அடுக்கு செல்லப் பிராணிகளிடம் இருக்காது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட அது செல்லப் பிராணிகளுக்குப் பரவாது. அது உருமாற்றம் அடைந்து மனிதர்களைத்தான் பாதிக்கும்.

குறிப்பாக இந்த வைரஸால் ஏ ரத்த வகை உள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஏ வகை ரத்தம் உள்ளவர்கள் மட்டும் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல பெண்களுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி முறை அவர்களைக் காப்பாற்றுகிறதா என்பதும் இன்னும் சரியாகத் தெரியவரவில்லை” எனக் கூறியுள்ளார்.

CORONAVIRUS, INDIA, MEN, WOMAN, AIIMS, DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்