"பொண்டாட்டி தொல்லையிலிருந்து விடுபட.. மரத்தை சுற்றி பரிகாரம் செய்யும் கணவர்கள்".. இது புதுசா இருக்கே..எங்கப்பா இது?
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டில் தாங்கள் சந்திக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபட, கல்யாணம் ஆன ஆண்கள் அங்குள்ள அரச மரம் ஒன்றை சுற்றி பரிகாரம் செய்கிறார்கள். இது இந்தியா முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக திருமண தடைகள் நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற கோவிலில் உள்ள மரங்களை சுற்றி மக்கள் பரிகாரம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆஸ்ரமம் ஒன்றில் திருமணமான ஆண்கள் வினோத பரிகாரம் ஒன்றை செய்கிறார்கள். இதன்மூலம் தங்களது வீட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீரும் என நம்புகிறார்கள் அவர்கள்.
தொல்லைகளில் இருந்து விடுபட
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சேர்ந்து ஒரு ஆஸ்ரமத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் ஒரு அரசமரம் இருக்கிறது. இங்கே, ஆண்கள் வீட்டில் தங்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என கோஷமிட்டபடி இங்குள்ள அரச மரத்தை சுற்றிவந்தனர். இந்த வினோத போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும், தற்போது உள்ள மனைவியே அடுத்த ஜென்மத்திலும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டு இந்த மரத்தை சுற்றினால் தக்க பலன்கிட்டும் எனவும் நம்புகிறார்கள் இங்குவரும் சில கணவன்மார்கள்.
7 ஜென்மம்
இந்நிலையில் 'வத் பூர்ணிமா' என்னும் சடங்கில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இந்த ஜென்மத்தில் தங்களுக்கு கணவராக இருப்பவரே 7 ஜென்மத்திற்கும் கணவராக வரவேண்டும் எனவும் தங்களது இல்லற வாழ்க்கை சிறக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு ஆலமரத்தை சுற்றி வழிபாடு நடத்துவது அங்கு பிரசித்தி பெற்றதாகும். இந்த வைபவம் இன்று நடைபெற்றிருக்கிறது.
நேற்று, வீட்டில் தங்களுக்கு அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கணவர்கள் பூஜை நடத்தி ஆஸ்ரமத்தில் உள்ள அரச மரத்தை 108 முறை சுற்றி வந்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய இந்த ஆஸ்ரமத்தின் தலைவர் பாரத் ஃபுலாரே,"பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவையும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, ஆண்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பும் வகையில் சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் இந்த போராட்டத்தை நடத்தினோம்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏர்போர்ட்ல 4 நண்பர்கள் செஞ்ச வினோத செயல்.. 'நியாயமா இதெல்லாம்' என கேள்வியெழுப்பும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!
- "லேப்டாப் என்ன Weight -ஆ இருக்கு".. கஸ்டம்ஸ் ஆபிசருக்கு வந்த டவுட்...திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 3 பேர் - வைரலாகும் வீடியோ
- ஆபரேஷன் ஆட்டோ.. சீட்டுக்கடியில் பல லட்சம் ரூபாய் போலி நோட்டுகள்.. சென்னையை அலறவிட்ட கலர்பிரிண்ட் ஆசாமிகள்..!பிடிபட்டது எப்படி?
- ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..
- இனி வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு சொன்னா ரெண்டு யோசிப்பாங்க போலயே.. RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
- மனைவிகளை மாற்றிய விவகாரம்.. விஐபிகளை தப்ப வைக்க முயற்சியா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!
- “மிச்சத்த அங்க பேசலாம் வாங்க!”.. ‘மயக்கும்படி பேசி.. சொகுசு ஹோட்டலுக்கு வர சொன்ன இளம்பெண்’.. நம்பி போன இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- "இனி சம்பள விஷயத்தில் இது கட்டாயம்"... 'தனியார் துறை ஊழியர்களுக்காக அதிரடி சட்டம்!'... 'UAE-க்கு குவியும் பாராட்டுக்கள்!!!'...
- மனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்!.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை!’.. அப்படி என்னதான் நடந்தது?
- '33 கோடியே ஒண்ணு...' 'தாயே கொரோனா...' உனக்கு 'முக்கால பூஜை' நடத்துறோம்... 'கொஞ்சம் அமைதியா இரு...' 'சேட்டனின்' வேற லெவல் 'முயற்சி...'