"அக்னிபத்'ல வேலைக்கு போனா, பசங்களுக்கு கல்யாணம் நடக்கிறதே கஷ்டம்.." மேகாலயா ஆளுநரின் பரபரப்பு கருத்து

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முப்படைகளில் இளைஞர்களை தற்காலிகமாக பனி அமர்த்துவதற்காக 'அக்னிபத்' என்னும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தா.. இலவசமா சாப்பாடு கொடுக்கும் உணவகம்..இது செம்ம ஐடியாவா இருக்கே..!

இந்த அக்னிபத் திட்டத்தின் மூலம், ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் நான்கு ஆண்டு ஒப்பந்த காலத்தில், அக்னி வீர் எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளனர்.

இந்த அக்னிபத் ஆள் சேர்ப்பு திட்டத்திற்கான வயது வரம்பு, குறைந்தபட்சம் 17.5 வயதும், அதிகபட்சமாக  23 வயதும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்யாணம் நடக்குறது கஷ்டம் ஆயிடும்..

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் குறித்து, மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள கருத்து, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேசும் சத்யபால், "வருங்கால ஜவான்கள் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுவார்கள். தொடர்ந்து, ஆறு மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். பின்னர் மூன்று வருட வேலைக்கு பின்னர், ஓய்வூதியம் இன்றி அவர்கள் வீடு திரும்பும் போது, அவர்களுக்கு திருமண வரன் கிடைப்பதே மிக கடினமான காரியமாக மாறி விடும். இதனால், அக்னிபத் திட்டம், வருங்கால ராணுவ வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் எதிரான ஒன்றாக உள்ளது. எனவே, ஒப்பந்த அடிப்படையில் ஆள் தேர்வு செய்யும் இந்த 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்வது பற்றி யோசிக்க வேண்டும்" என சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டா போராடுவேன்..

இதனைத் தொடர்ந்து, தனது ஓய்வுக்கு பிந்தைய திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்ய பால் மாலிக், "மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ விருப்பம் இல்லை. விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக தேவைப்படும் இடங்களில் போராடுவேன்" எனவும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

Also Read | "பாத்து பாத்து கஷ்டப்பட்டு கட்டுன வீடு'ங்க, இப்போ கண்ணும் முன்னாடியே.." 3 அடியால் வந்த பிரச்சனை.. தரைமட்டமான 1.5 கோடி ரூபாய் வீடு..

MEGHALAYA GOVERNOR, MEGHALAYA GOVERNOR SATYAPAL MALIK, AGNIPATH SCHEME

மற்ற செய்திகள்