'இவருக்கு இது புதுசு இல்ல'...'ஆசிட் அடித்தவர்களுக்கு என்கவுன்ட்டர்'...யார் இந்த 'சஜ்ஜனர் ஐபிஎஸ்'?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர் செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது  4 பேரும் தப்பிச்செல்ல முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்த என்கவுன்ட்டரில் மூன்று காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுட்டுக் கொல்லபப்ட்ட நால்வரின் உடல்களும் ஷாத் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களிலும் காவல் ஆணையருக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.

காவல் ஆணையர் சஜ்ஜனாருக்கு என்கவுன்ட்டர் என்பது புதிது அல்ல. ஏற்கனவே தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர். 2008ல் வாராங்கல் பகுதியில் ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. ஒரு தலை காதல் காரணம் இந்த ஆசிட் வீச்சு சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், . தற்போது சைபராபாத் கமிஷனராக இருக்கும் வி.சி சஜ்னார், வாரங்கல் எஸ்.பி'யாக இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

அப்போது குற்றவாளிகள் 3 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். அப்போது 3 வரும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிக்க முயற்சித்த போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சரியாக சம்பவம் நடந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். தற்போது அதே போன்று பெண் மருத்துவர் கொலை வழக்கில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே வைத்துஎன்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்

ENCOUNTER, MURDER, SEXUALABUSE, POLICE, HYDERABAD, CYBERABAD POLICE COMMISSIONER, V C SAJJANAR, WARANGAL, PRIYANKA REDDY CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்