'2013' -ல் வீட்டை விட்டு வெளியேறிய 'பெண்'... இப்போ 7 வருஷத்துக்கு அப்றம் திரும்பி வந்தாங்க,, "அதும் சும்மா இல்ல"... 'hard work' மூலம் திரும்பி பார்க்க வைத்த 'பெண்மணி'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் (Meerut) பகுதியை சேர்ந்த சஞ்சு ராணி வர்மா (Sanju Rani Verma) என்ற பெண், கடந்த 2013 ஆம் ஆண்டு கையில் சிறிதளவு பணத்துடன் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

முன்னதாக, சஞ்சு ராணியின் தாய் உயிரிழந்த நிலையில், அவர் முதுகலை (Post Graduate) படித்துக் கொண்டு இருந்துள்ளார். தாய் இறந்த பின்னர், அவரது குடும்பத்தினர் இனிமேல் படிக்க வேண்டாம் என்றும், திருமணம் செய்து கொள் என்றும் கூறி சஞ்சு ராணியிடம் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் தொந்தரவால் மேற்படிப்பு படித்து உயர் அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவை கலைக்க விரும்பாத சஞ்சு ராணி, வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து,  மேற்படிப்பை பாதியில் விட்டு விட்டு அவர் வெளியே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்தும், சில தனியார் ஸ்தாபனங்களில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்தும், தனது செலவுகளை சமாளித்தும் வந்துள்ளார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், மறுபக்கம் PSC (Public Service Commission) தேர்வுக்கும் தயாராகி வந்தார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற UPPSC-2018 தேர்வை சஞ்சு ராணி எழுதியிருந்த நிலையில், இந்த தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், சஞ்சு வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் அவர் வணிக வரி அதிகாரியாக (commercial tax officer) பணியில் நியமிக்கடவுள்ளார். தனது கனவை ஓரளவு எட்டியுள்ள நிலையில், சிவில் தேர்வு எழுதி வெற்றி பெறுவதே தனது லட்சியம் என அவர் கூறியுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டை விட்டு வெளியேறிய சஞ்சு ராணி வர்மா, தற்போது தனது வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், படிக்க வேண்டாம் திருமணம் செய்து கொள் என கூறிய அவரது குடும்பத்தினர், தற்போது அவர் உயர் அதிகாரியாக உள்ள நிலையில், அவரை அதிகம் மதித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

தனது கனவை நோக்கி செல்லும் வழியில் வரும் தடைகளை உடைத்து, கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் சஞ்சு ராணி வர்மா.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்