புதிய 'ஒமிக்ரான்' வைரஸ் வேற கண்டுபிடிச்சிருக்காங்க...! இந்தியால 'மூணாவது' அலைக்கு வாய்ப்பு இருக்கா...? - மருத்துவ நிபுணர் தெரிவித்த 'முக்கிய' தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் அல்லாமல் தென்னாப்பரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் மூன்றாவது அலையை உருவாக்கலாம் என தேசிய தடுப்பூசி திட்ட ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாம் அலையில் நோய் தொற்று அதிகளவில் பரவியும், மக்களின் உயிரை பாதிக்கும் அளவும் இருந்தது.

தற்போது கொரோனா தடுப்பூசி மூலம் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும் சில இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட தயக்கம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் பரவிவரும் புதிய வகை வைரசான ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இது உலக நாடுகளில்  மீண்டும் மூன்றாவது அலையை உருவாகலாம் என்று தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் எச்சரித்து இருக்கிறார்.

இதுகுறித்து கூறிய அவர் 'கொரோனா வைரஸ் ஒற்றை இழை கொண்ட ஆர்.என்.ஏ. வைரசாகும். பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) மரபணு வரிசையில் ஏற்படுகிற மாற்றங்கள் ஆகும். வைரஸ் தன் இயல்பில் தான் பாதிக்கக்கூடிய ஒரு உடலில் நுழைகிறபோது, அது பலவாக பரவி அதிகரிக்கும்.

இந்நிலையில், தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி.1.1.529 வைரஸ், இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தலாம். உருமாறிய கொரோனா வைரஸை விட இந்த பி.1.1.529 வைரசில் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்தியாவில் இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், புதிய வகை வைரசால் மூன்றாவது அலை உருவாகி பல மாநிலங்களில் நிலைமையை மோசமாகலாம்.

மருத்துவ உலகில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என 4 வைரஸ்கள் கவலைக்குரிய வைரஸ்களாக கருதப்படும். இந்த பி.1.1.529 வைரஸ் டெல்டாவிடம் இருந்து அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பது கவலை அளிக்கிறது. ஏனென்றால் டெல்டா வைரஸ் அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டது.

வைரஸ் மக்கள் மத்தியில் பரவ தொடங்கிய பின்னரே தடுப்பூசி செயல்திறன் குறித்து கூற முடியும், இதுவரை அதுதொடர்பாக எந்த முடிவான ஆதாரமும் இல்லை. எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றியும் வர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

CORONAVIRUS, 3RD WAVE, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்