“நான் விடுதிக்கு வந்து சேர்ந்துட்டேன்!”.. “அடுத்த நாள் காலை மருத்துவக் கல்லூரி மாணவரின் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!”.. உறையவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. சொந்தமாக விவசாய நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்துவரும் இவரது மகன் வம்சி ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக வீடு திரும்பிய வம்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி செல்வதற்காக கிளம்பினார். அவரை அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்.

வம்சியும் அன்று இரவு 8 மணி அளவில் தன் குடும்பத்தினருக்கு போன் செய்து கல்லூரி விடுதிக்கு வந்து விட்டதாகவும் தகவல் கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் காலை (ஜனவரி 18 சனிக்கிழமை) 7 மணியளவில் தனது விவசாய நிலத்துக்குட்பட்ட கிணற்றுக்குச் சென்று பார்த்தவ திருப்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார் வம்சி. இந்த கிணற்றின் அருகே, வம்சி ஊருக்கு எடுத்துக் கொண்டு சென்ற பை இருந்துள்ளது. இதனை பார்த்து பதறிய திருப்பதி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வம்சியின் சடலத்தை மீட்டதோடு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் வம்சியின் சடலம் கைப்பற்றப்பட்டபோது அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. வம்சி பல நாட்களுக்கு முன்பாக தூக்கத்தில் நடந்து வந்து இந்த கிணற்றில் விழுந்து விட்டதாகவும், பின்னர் பைப் ஏறி மேலே வந்ததாகவும் தன் குடும்பத்தினரிடம் கூறியிருந்துள்ளார்.

எனினும் இம்முறை வம்சி அவராகவே இந்த கிணற்றுக்கு வந்தாரா அல்லது அவரை யாரேனும் அழைத்து வந்தார்களா என்கிற குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இதேபோல் கல்லூரி விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டதாக, வம்சி தன் வீட்டுக்கு போன் செய்து தகவல் சொன்னதாகக் கூறப்படும் நிலையில், அவரது செல்போன் உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வம்சியின் சந்தேகத்திற்கு உட்பட்ட இந்த மரணம் பற்றிய முழு உண்மையும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

TELANGANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்