'பிளைட்ல சாப்பாடு கிடையாதா'?... 'வெளிநாட்டு பயணங்களுக்கு என்ன கட்டுப்பாடு'?... மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விமான பயணங்களின் போது உணவு வழங்கப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னையிலிருந்து டெல்லி போன்ற நகரங்களுக்குப் பயணம் செய்யும்போது பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கும் என்பதால், அத்தகைய விமானச் சேவைகளில் உணவு அளிக்கலாம்.

ஆனால் சென்னையிலிருந்து பெங்களூரு அல்லது மதுரை போன்ற நகரங்களுக்குப் பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறைவாக இருக்கும் என்பதால், அத்தகைய விமானச் சேவைகளில் உணவுப் பொருட்களை விற்கவோ அல்லது இலவசமாக விநியோகிக்கவோ தடை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில் இந்தக் கட்டுப்பாடு உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லக்கூடிய விமானச் சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. உணவு உண்ணும் நேரத்திலே பயணிகள் தங்களுடைய முகக்கவசத்தை அகற்றி விடுவார்கள் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மற்ற செய்திகள்