இன்ஜினியரிங் படிப்பில் சேர 3 ‘முக்கிய’ பாடங்கள் கட்டாயமில்லை.. புதிய நடைமுறை அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொறியியல் படிப்பில் சேருவதற்கு 3 முக்கிய பாடங்கள் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்கள் கட்டாயமாக உள்ளன. இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரையறுத்துள்ளது. அதில் கணிதம், இயற்பியல், வேதியியில் பாடங்கள் படிக்காதவர்கள் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் 2021-2022ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பயோ டெக்னாலஜி, வேளாண்மை, வணிகம், தொழில்முனைவு, தொழிற்கல்வி என 12 பாடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பில் இதில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியியல் படிப்பில் சேரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு அடிப்படையான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை 12-ம் வகுப்பில் பயிலாதவர்கள், பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு அவற்றை, இணைப்பு பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு 4 ஆண்டுகளாக இருக்கும் சூழலில், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் படிப்பு விட்டு நின்றால், புதிய கல்விக்கொள்கையின்படி திறன் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாத சூழலில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இன்ஜீனியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி’... ‘இனி அவங்க, அவங்க தாய்மொழியிலேயே’... ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு’...!!!
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- 'என்ன?... அரியர்ஸ் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சியா?.. அதெல்லாம் முடியாது'!.. 7 லட்சம் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!.. என்ன நடந்தது?
- "இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- “பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!!”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு?”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- 'ஸ்டுடென்ட்ஸ் ரெடியா இருங்க'... 'என்ஜினீயரிங் கல்லூரிகளை எப்போது தொடங்கலாம்'... ஏஐசிடிஇ அறிவிப்பு!
- ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!
- 'வெளிய போக முடியாது, அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்...' 'பனையோலையில் விசிறி, இன்னும் பல பொருட்கள்...' ஊரடங்கை உபயோகப்படுத்தும் எஞ்சினியரிங் பட்டதாரி...!
- ‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...
- ‘யாராவது காப்பாத்துங்க’.. கதறியழுத மாணவர்கள்.. நண்பர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ‘இன்ஜினீயரிங்’ மாணவர்..!