‘ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து!’.. லெபனான் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்கிற நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் 8 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைமூட்டத்தை பலரும் ஃபோட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். புகை வெளியேறுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

அண்மையில்தான் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது காரணமாக பலர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் மணலி உள்ளிட்ட இடங்களில் உள்ள கெமிக்கல் ஆய்வகங்களில் அதிகாரிகள் தீவிர பரிசோதனை செய்து வருவது  குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்