நம்ம 'நாட்ல' எப்டி 'கஷ்டப்பட்டுக்கிட்டு' இருக்காங்க... இப்படி ஒரு 'திருட்டுத்தனம்' பண்ண எப்படி மனசு வந்துச்சு?
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் மாஸ்க்குகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்க மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அந்தந்த நாட்டு அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. சீனா போன்ற நாடுகளில் இருந்து மாஸ்க்குகளை இறக்குமதி செய்து வந்த நாம், தற்போது தேவை அதிகரித்து இருப்பதால் உள்நாட்டிலேயே மாஸ்க்குகளை அதிகளவில் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறோம்.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல முயன்ற 5 லட்சம் மாஸ்க்குகளை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர். விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த பொருட்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தைகள் ஆடை, அழகு சாதன பொருட்கள் என எழுதி வைக்கப்பட்டு இருந்த பார்சல் இருந்தது. இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அதில் 2,480 கிலோ அளவில் முக கவசம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த பெட்டிகளை சோதனையிட்டதில், சுமார் 5 லட்சம் முகக் கவசங்கள், 57 லிட்டர் சானிடைசர், 952 பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனாவால் நாட்டு மக்கள் தீராத துயரத்தில் மூழ்கி இருக்கும் இந்த நேரத்திலும் இதுபோன்ற வேலைகளை செய்ய சிலர் முயற்சித்து வருகின்றனர் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ATM-ல் உதவி செய்த புண்ணியவான்!'.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்'! புகார் கொடுக்க 'வங்கிக்கு சென்றபோது 'காத்திருந்த' அடுத்த 'அதிர்ச்சி'!
- உங்களோட 'லாஸ்ட்' வொர்க்கிங் டே ... 3 நிமிடங்கள் மட்டுமே பேசி... 3700 பேரை 'தூக்கிய' நிறுவனம்!
- “ஒரு நாளைக்கு 6 ஆயிரம் குழந்தைகள்.. இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகள்.. மரணத்தைத் தழுவலாம்!”.. உலகை உறையவைத்த யுனிசெஃப் ரிப்போர்ட்!
- 'இப்படி ஒரு அதிபரா?...' 'என்ன செய்றது...' 'விழிக்கும் மக்கள்...' கடுமையான 'விலை கொடுக்கும்' நாடு...
- 'வீட்டிலிருந்தே வேலை...' 'பட்டையை கிளப்பும் ஆஃபர்...' 'ஊரடங்கிற்கு பிறகும்...' 'அரசு ஊழியர்களுக்கு' அடிக்கும் 'ஜாக்பாட்...'
- 'அட கடவுளே!.. இப்படி ஒரு யோசனை வராம போயிடுச்சே!'.. சிக்கியது மிகப்பெரிய துருப்புச் சீட்டு!.. ஆய்வாளர்கள் பரபரப்பு தகவல்!
- 'பயணம்' செய்பவர்கள் கவனத்திற்கு... இனி 'இதெல்லாம்' கட்டாயம்... 'தமிழக' அரசின் 'புதிய' பரிசோதனை, தனிமைப்படுத்துதல் வழிமுறைகள்...
- ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்!.. தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன?.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
- தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!.. தொடர்ச்சியான உயிரிழப்புகள்!.. முழு விவரம் உள்ளே
- 'இவர்களுக்கெல்லாம்' அதிக ஆபத்து... கொரோனாவால் மக்கள் சந்திக்கும் 'மிகப்பெரும்' பிரச்சனை... ஐநா சபை 'எச்சரிக்கை'...