'கையில் டாட்டூ.. ஆண் வேடத்தில் வீடியோ!'.. கணவரை உதறிவிட்டு, டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் டிக்டாக் மூலம் அறிமுகமான சகோதரியின் தோழியுடன், திருமணமான பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவ ஆந்திராவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் அர்ச்சனாவிற்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகியுள்ளன. இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அர்ச்சனாவின் பாசமிகு கணவர் ஆசையாக வாங்கித் தந்த ஸ்மார்ட்போனில் அர்ச்சனான் டிக்டாக் முயற்சி செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் டிக்டாக் என்கிற அந்த கடலில் மூழ்கித்தான் போனார் அர்ச்சனா. அதில் அர்ச்சனாவின் சகோதரியின் தோழி அஞ்சலி என்பவர் டிக்டாக் வழியாக அர்ச்சனாவுக்கு தோழியாகியுள்ளார். அர்ச்சனாவின் பெயரை அஞ்சலி தன் கையிலும் பச்சை குத்தும் அளவுக்கு இவர்களின் நட்பு ஆழமாகியுள்ளது. டிக்டாக்கில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்த அர்ச்சனாவின் வீட்டுக்கு, அவ்வப்போது அஞ்சலி வரத்தொடங்கியதால் ரவிச்சந்திரன் அர்ச்சனாவை கண்டித்ததுடன், அர்ச்சனாவின் ஸ்மார்ட் போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.
விளைவு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சென்ற அர்ச்சனா அங்கும் தனது டிக்டாக் வேலைகளை ஆரம்பித்துள்ளார். அப்போது அவரது பெற்றோரும் இதனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு அஞ்சலியுடன் அர்ச்சனா ஓட்டம் பிடித்துள்ளார். பெண்ணாக இருந்தபோதிலும் ஆணைப் போல் மீசை வைத்துக்கொண்டு டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு அர்ச்சனாவை காதல் வலையில் வீழ்த்திய அஞ்சலியுடன் அர்ச்சனா ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’!.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..!
- ‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்!
- 8 வயது சிறுமியின் அறைக்குள்... ‘திடீரென’ கேட்ட ‘ஆண்’ குரல்... தாய்க்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- ‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...
- ‘பேருந்து இல்லாததால்’... ‘லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமிக்கு’... ‘இளைஞரால் நேர்ந்த கொடூரம்’!
- திருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..
- 'பிரிந்து சென்ற காதல் மனைவி'... 'டிக் டாக் வீடியோ பதிவிட்டு'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவு'!
- ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..!
- ‘எனக்கு இத மட்டும் தந்தீங்கனா’... ‘எங்க அம்மாவ நா காப்பாத்தி உட்ருவேன்’... தந்தையை இழந்த சிறுமியின் உருக்கமான வார்த்தை!
- 'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!