‘இது கொடூரமான முன்னுதாரணம்’! தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்துக்கு பாஜக எம்.பி கண்டனம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதானவர்களை என்கவுண்டர் செய்தது கொடூரமான முன்னுதாரணம் என பாஜக எம்பி மேனகா காந்தி கண்டித்துள்ளார்.

தெலுங்கானா பெண் மருத்துவர் கடந்த 27ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து விசாரணைக்காக 4 பேரும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது தப்பிக்க முயற்சித்தாகவும் அதனால் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாஜக எம்.பியும், மூத்த தலைவருமான மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இது ஒரு கொடூரமான முன் உதாரணம். அவரவர் விருப்பப்படி மற்றவர்களை கொல்ல முடியாது. சட்டத்தை கையில் எடுக்க கூடாது. குற்றவாளிகளை நீதிமன்றங்கள்தான் தூக்கிலிட வேண்டும் என பாஜக எம்.பி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெலுங்கானா என்கவுண்டர் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், என்ன நடந்தது என்ற விவரங்கள் தெரிவதற்கு முன் கண்டனம் தெரிவிக்க முடியாது. அதேநேரம் சட்டத்தை மதித்து நடக்கும் சமூகத்தில் நீதித்துறையை மீறிய கொலைகளை ஒப்புக்கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.

CRIME, BJP, MANEKAGANDHI, SHASHITHAROOR, ENCOUTER, TELENGANAPOLICE, JUSTICEFORPRIYANAKAREDDY, HYDERABADPOLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்