"எங்கப்பா கஷ்டப்பட கூடாது சார்".. அப்பாவுக்கு உதவி செய்ய போராடும் மகன்.. IAS அதிகாரி பகிர்ந்த நெகிழவைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக மகன் ஒருவர் பார்ட் டைமில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது வாழ்க்கை குறித்து பேசும் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

அவனீஷ் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள வீடியோ பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

அப்பாவுக்காக

காரில் பின்பக்கம் இருக்கும் பயணியிடம் பேசிக்கொண்டே காரை ஓட்டும் இவர், தனது அப்பாவுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே கார் ஓட்டும் பணியினை மேற்கொண்டு வருவதாகவும், தான் ஒரு தொழில்முறை ஓட்டுநர் அல்ல என்றும் கூறுகிறார். மேலும் அவர் பேசுகையில்,"நான் ஐபி பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் இன்டெர்நேஷ்னல் பிசினஸ் (Marketing and International Business) துறையில் முதுகலை முடித்திருக்கிறேன். கடந்த 7 வருடங்களாக இணைய வழி வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். படிக்கும்போதே, எனது தந்தைக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். நான் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அவருக்கு உதவி செய்துகொண்டுதான் இருப்பேன். ஏனெனில் அவர் இல்லையென்றால் நான் என்ன ஆகிருப்பேன் என்பதே தெரியாது" என உருக்கத்துடன் கூறுகிறார்.

இப்படிப்பட்ட தந்தை கிடைத்ததற்கு தான் பாக்கிசாலி எனக்கூறிய அவர்,"அவர் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் கல்வியாக இருந்தாலும் சரி, வேறு ஏதாவது இருந்தாலும் சரி, அதற்கெல்லாம் காரணம் அவர்தான். எனவே, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், எனது அலுவலக நேரம் முடிந்த பிறகு அல்லது எனது விடுமுறை நாட்களில், என்னால் முடிந்தவரை அவருக்கு உதவுகிறேன். அவர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். நான் பாக்கியசாலி" எனக் கூறுகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவனீஷ் சரண்,"என்னை உணர்ச்சிவசப்பட செய்துவிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அந்த டிரைவரை பாராட்டுவதோடு, அவர் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

FATHER, SON, CAB DRIVER, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்