20 ரூபாயால் தொடரப்பட்ட வழக்கு.. "சுமார் 22 வருசத்துக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு.!!"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

20 ரூபாய் பெயரில் கடந்த 22 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதற்கு முடிவு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இறந்து போன மகன், கலங்கி நின்ற மருமகள்.. "அவளுக்கு ஏதாச்சும் பண்ணனும்.." சோகத்திலும் மாமியார் எடுத்த நெகிழ்ச்சி முடிவு

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் துங்நாத் சதுர்வேதி. கடந்த 1999 ஆம் ஆண்டு, இவர் ஒரு வழக்கு தாக்கல் செய்யவே, அதன் முடிவு தான் தற்போது கிடைத்துள்ளது.

வழக்கறிஞரான துங்நாத், கடந்த 1999 ஆம் ஆண்டு, மதுராவில் இருந்து மொராதாபாத் செல்ல, மதுரா ரெயில் நிலையத்திலுள்ள டிக்கெட் புக்கிங் சென்டரில் டிக்கெட் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது, இரண்டு டிக்கெட்டிற்கு தலா 35 ரூபாய் வீதம், 70 ரூபாய் கட்டணமாக வந்துள்ளது. இதற்காக, துங்நாத் டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியரிடம் 100 ரூபாயை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு மீதம், 30 ரூபாயை கொடுப்பதற்கு பதிலாக, அந்த ஊழியர் 10 ரூபாயை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 20 ரூபாய் குறைவாக இருப்பதை துங்நாத் அறிந்ததும், இது பற்றி அங்கே அவர் கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கட்டணத்திற்கு அதிகமாக இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டதால், வழக்கறிஞரான துங்நாத் சதுர்வேதி, மதுராவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு ஒன்றையும் போட்டுள்ளார். இது தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகள் சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைக்கு பிறகு, இதில் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது நீதிமன்றம்.

அதுவும் துங்நாத் சதுர்வேதிக்கு சாதகமாக இந்த தீர்ப்பும் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக பேசும் துங்நாத் சதுர்வேதி, "இந்த வழக்கு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணைகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த வழக்கை எதிர்த்து, நான் இழந்த நேரத்திற்கும், சக்திக்கும் விலை மதிப்பே கிடையாது" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பின் படி, சதுர்வேதிக்கு 15,000 ரூபாய் அபராதமாக ரெயில்வே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், 1999 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, 20 ரூபாய்க்கு ஆண்டு தோறும் 12 சதவீத வட்டி விகிதத்தில் துங்நாத் சதுர்வேதி திரும்ப பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிபந்தனையை 30 நாட்களில், இந்தியன் ரெயில்வே பூர்த்தி செய்ய தவறினால், வட்டி விகிதம் 15 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Partner பத்தி ஒரு Pageக்கு பெண் கொடுத்த விளம்பரம்.. "ஊரே இப்போ அந்த பொண்ண தான் தேடிக்கிட்டு இருக்கு".. இதுதான் காரணம்.!

UTTARPRADESH, MAN, LEGAL SUIT, AGAINST, RAILWAYS, COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்