‘எட்டு மாத கர்ப்பிணி மனைவி, கைக்குழந்தை’... ‘700 கிலோ மீட்டர் தூரத்தை’... ‘நெஞ்சை உருக்கும் சோகம்’
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வையும் புரட்டி போட்டுள்ள நிலையில், புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் சோகக் கதை குறித்த செய்தித் தொகுப்பு இது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ராமு என்பவர், ஹைதராபாத்தில் தங்கி கூலி வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி தன்வந்தா 8 மாத கர்ப்பிணி. இவர்களுக்கு அனுராகினி என்ற கைக்குழந்தையும். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், உணவு இன்றி, கையில் காசும் இல்லாமல் தவித்த இவர், தனது குடும்பத்துடன் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்ல திட்டமிட்டார்.
தன் மகளை தோளில் சுமந்துகொண்டு கர்ப்பிணி மனைவியோடு சில கிலோ மீட்டர் தூரம் உணவுகூட கிடைக்காமல் நடந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பெண் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு நடக்க முடியாது என்பதை உணர்ந்த ராமு செய்வதறியாது திகைத்து நின்றார். அப்பொழுது அவர்கள் சென்ற காட்டுவழிப் பாதையில் அவருக்கு ஒரு யோசனை ஒன்று கிடைத்துள்ளது. அந்த காட்டில் கிடைத்த குச்சிகளையும் மரப் பலகைகளையும் வைத்து கைகளால் இழுத்துச் செல்லக்கூடிய மர தள்ளுவண்டி ஒன்றை அவரே தயார் செய்து இருக்கிறார்.
பின்னர் அதில் அவர் கர்ப்பிணி மனைவியும் அந்தச் சின்னப் பெண் குழந்தையையும் வைத்து இழுத்து சென்றார். வழியில் உணவுக் கூட சரியாக சாப்பிடாமல், இப்படி இழுத்துக்கொண்டே சுமார் 700 கிலோ மீட்டரை ராமுவும் அவரது குடும்பத்தினரும் கடந்து உள்ளனர். ஒருவழியாக நேற்று இரவு அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு அருகில், மகாராஷ்டிராவின் எல்லையை அடைந்த பொழுது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ராமு தனக்கு நேர்ந்த சம்பவங்களை பற்றி கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களுக்கு உண்ண உணவும், அவரது குழந்தைக்கு காலணிகளும் கொடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, ஒரு வாகனம் ஏற்பாடு செய்து பத்திரமாக சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ராமுவும் அவரது குடும்பத்தினரும் தள்ளுவண்டி மூலம் 700 கிலோமீட்டர் பயணித்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல், டெல்லியிருந்து. ராஜஸ்தானிற்கு சுமார் 40 இளைஞர்கள், குற்றவாளிகள் போல் பார்க்கப்படுவதால், பகலில் மறைந்தும், இரவில் நடந்தும் 700 -க்கும் மேற்பட்ட கிலோ மீட்டரை கடந்த சென்ற சோகம் நிகழ்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!
- 'கர்ப்பமான காதல் மனைவி'... 'ஆசபட்டத வாங்கி கொடுக்க முடியலியே'...'ஒரு நிமிடத்தில் உருக்குலைந்த குடும்பம்'... சென்னையில் நடந்த சோகம்!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- “ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'
- காபி போட்டு தர மறுத்த மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்!.. பெங்களூருவில் பரபரப்பு!
- ‘என் கணவர் முகத்தக்கூட பார்க்க முடியலையே’.. கதறியழுத மனைவி.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
- 'மாமனாரைத் தாக்கி...' 'மிளகாய்ப் பொடி தூவி...' 'பொண்டாட்டியை கடத்திய புருஷன்...' 'கைதுசெய்து' மாமியார் வீட்டில் 'பொங்கல்' வைத்த 'போலீசார்...'
- 'என் லைன்ல உங்க அப்பா குறுக்க வராரு'...'தாயின் கோர திட்டத்திற்கு துணை போன மகன்'...நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- மருந்து வாங்க போன கணவரிடமிருந்து வந்த ஒரு ‘போன் கால்’.. உடனே கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்ற ‘கர்ப்பிணி’!
- ‘யார் வீட்ல தங்குறது?’.. ஊரடங்கால் 2 கல்யாணம் செய்தவருக்கு வந்த ‘சோதனை’.. சண்ட போட்ட ‘மனைவிகள்’.. கணவர் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!