பெட்ரோல் போட போனவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. சில்லறைக்காக எடுத்த முடிவு.. வாழ்க்கையையே மாத்திடுச்சு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்காவில் தனது காரில் எரிபொருள் நிரப்ப சென்றவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனை தான் எதிர்பார்க்கவில்லை என அந்நபர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க வைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்தவர் ஒருவர்.

அமெரிக்காவின் மேற்கு ப்ளூம்ஃபீல்டு பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஸ்பால்டிங். 41 வயதான இவர் சமீபத்தில் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது எரிபொருள் குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். அப்போது, அருகில் இருந்த எரிபொருள் நிலையத்திற்கு சென்று தனது காரை நிறுத்தியிருக்கிறார்.

Image Credit: Michigan Lottery

தனது வாகனத்தில் எரிபொருளை நிரப்பிய பிறகு அதற்கான கட்டணத்தை மேத்யூ செலுத்தியிருக்கிறார். அப்போது, மீதி 5 டாலரை பணியாளர் கொடுக்க, அப்போது எதேச்சையாக அருகில் இருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பார்த்திருக்கிறார் மேத்யூ. உடனடியாக அதனை வாங்கியும் இருக்கிறார். கையில் இருந்த 5 டாலர்களை கொடுத்து மேத்யூ வாங்கிய டிக்கெட்டிற்கு 107,590 அமெரிக்க டாலர்கள் (சுமார் 87 லட்சம் ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது.

இதனை அறிந்து அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய அவர்,"நான் இதற்கு முன்னர் அவ்வளவாக இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதில்லை. ஆனால், சில்லறையை செலவு செய்ய நினைத்து டிக்கெட்டை வாங்க நேர்ந்தது. அந்த டிக்கெட்டிற்கு ஜாக்பாட் அடித்ததை அறிந்து பணியாளர்கள் அனைவரும் கொண்டாட துவங்கினர். அந்த தருணம் என்னால் மறக்க முடியாதது. இந்த தொகையை நான் சேமிப்பில் வைக்க இருக்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

USA, LOTTERY, GAS STATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்