"எப்படி பாஸ் சாத்தியம்?".. தக்காளி கூடைய வெச்சே மனுஷன் காட்டுன வித்தை.. Medical Miracle-ன்னு வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நாம் திறந்தாலே அதில் ஏராளமான விஷயங்கள் குறித்த வீடியோக்கள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

"எப்படி பாஸ் சாத்தியம்?".. தக்காளி கூடைய வெச்சே மனுஷன் காட்டுன வித்தை.. Medical Miracle-ன்னு வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!
Advertising
>
Advertising

Also Read | "மைனா மைனா நெஞ்சுக்குள்ள".. நந்தினிய பாத்து பாடிய ஜிபி முத்து.. "அட, இதுக்கு தான் அப்படி பாடுனாரோ?"

அப்படி நாம் பார்க்கும் போது, வழக்கமாக செய்ய வேண்டிய விஷயங்களை மிகவும் வித்தியாசமாக அதே வேளையில் எளிமையாக செய்து முடிப்பது தொடர்பான பல புதுமையான விஷயங்களை கூட நாம் நிறைய கவனிக்க வேண்டி இருக்கும்.

அப்படிப்பட்ட வீடியோக்களை நாம் பார்க்கும் போது எப்படி இந்த விஷயம் சாத்தியமானது என்பது போன்ற ஒரு வித ஆச்சரியம் தான் நமக்குள் உருவாகும்.

Man unique way of filling tomatoes in truck video amaze netizens

அந்த வகையிலான ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தை கலக்கி வருவதுடன் அதில் சம்மந்தப்பட்ட நபருக்கும் உரிய பாராட்டுக்களை பெற்று கொடுத்து வருகிறது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தக்காளி தோட்டம் ஒன்றில் சிலர் வேலை செய்து கொண்டிருப்பது தெரிகிறது.

பின்னாடி நிற்கும் சிலர், தக்காளிகளை கூடையில் அடுக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. அப்போது அங்கே நிற்கும் வாகனம் ஒன்றில் தக்காளிகளை தூக்கி ஒரு நபர் போடுகிறார். அவர் தக்காளி கூடைகளை தூக்கி போட, தக்காளி தனியாக பிரிந்து வாகனத்திற்குள்ளும், கூடை தனியாக வெளியேயும் வந்து விழுகிறது.

இதில் அசத்தலான விஷயம் என்னவென்றால், ஒரு கூடை கூட வாகனத்திற்குள் விழவில்லை என்பது தான். கூடை தனியே வெளியிலும், தக்காளிகள் நேராக வண்டியிலும் விழுவது பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அவர் ஏதோ Physics புரிந்து கொண்டு இப்படி செய்கிறார் என்றும் ஆச்சரியத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த வீடியோவும் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து கவனம் ஈர்த்தும் வருகிறது.

 

Also Read | 'மர்ம' சூட்கேஸ்.. உள்ளே இருந்த பெண்ணின் சடலம்.. திணறிய போலீஸ்க்கு உதவிய ஆட்டோ டிரைவரின் வாக்குமூலம்..!

MAN, TOMATOES, TRUCK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்