‘எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’.. நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து ‘மாயமான’ நபர்.. தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த நபருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவரை மங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு மேற்கொண்ட சிகிச்சையில் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையின் தனிவார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென மருத்துவமனை ஊழியர்களிடம், தனக்கு கொரோனா பாதுப்பு இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனக்கு தெரிந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொள்வதாக கூறி அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்ட அதிகாரிகள், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சைக்கு வரவில்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து அந்த நபரின் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அங்கும் அவர் வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் இருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த மாதிரி இருந்தா'... 'தயவு செய்து சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம்'... 'திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்'!
- கொரோனா வைரஸ் பீதியால்... தமிழக சட்டப்பேரவையில் கூடிய மருத்துவக்குழு!... வாசலிலேயே குழுமியிருக்கும் செவிலியர்கள்!
- ‘புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்’.. ‘3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!
- ‘கை மாறும் பணத்தால்’... ‘கொரோனா வைரஸ் பரவுமா?... உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?..
- ‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!
- ‘ஐயோ பாவம்’!.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..!
- சென்னை விமான நிலையத்தில் 15 சிறுவனுக்கு கொரானோ அறிகுறி..! ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை..!
- ‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...
- 'கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்வு'... '6 மாநிலங்களுக்கு'... 'மத்திய அரசு எச்சரிக்கை'!
- இந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...