"என் உடம்புக்குள்ள சிப் இருக்கு".. அஜித் தோவல் வீட்டிற்குள் நுழைந்த நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்ததால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரை காவல்துறையை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

"ப்ளீஸ்.. அதை கண்டுபிடிச்சு கொடுங்க".. இந்தியர்களிடம் ஹெல்ப் கேட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன்.!

அஜித் தோவல்

ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அஜித் தோவல், 1968-ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி. ஐபிஎஸ் பயிற்சிக்குப் பின்னர் இன்டலிஜென்ஸ் பீரோ ( ஐபி) எனப்படும் இந்திய உளவுத்துறையிலும், வெளிநாட்டு உளவுப் பிரிவான `ரா'-விலும் (Research and Analysis Wing- RAW) பணியாற்றியவர்.

பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் அஜித் தோவல் தற்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இவர் டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இது அஜித் தோவலின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். அந்த வீட்டியில் இதற்கு முன்னர் பிரதமராக பதவி வகித்த எல்.கே. குஜ்ரால் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மர்ம நபர்

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டிற்குள் இன்று காலை வாடகை டாக்சியில் வந்த ஒரு நபர் அத்துமீறி நுழைய முயற்சி செய்துள்ளார். உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.

இதனையடுத்து, தோவல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றதற்காக அந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டவரிடம் தற்போது டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

சிப் இருக்கு..

தோவல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரிடம் சிறப்பு போலீசார் நடத்திய விசாரணையின்போது கைதானவர் தன்னுடைய உடம்பில் சிப் இருப்பதாகவும், தன்னை வேறு ஒருவர் இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கைதானவர் மனநலம் பதிக்கப்பட்டவராக  இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி கைதானவர் அளித்த வாக்குமூலத்தில்," "எனுக்குள் யாரோ சிலர் மைக்ரோ சிப் வைத்துள்ளனர். அவர்கள் இயக்கியதால் தான் நான் அங்கு வந்தேன். நானாக அங்கு வரவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனால், போலீசார் குழப்பம் அடைந்தாலும், மேற்கட்ட விசாரணைகள் நடைபெற்றுவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஜேம்ஸ் பான்ட் என்று அழைக்கப்படும் அஜித் தோவலின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முற்பட்டு கைதாகி இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

"ரூமை திறக்கும்போது ஒரே புகையா இருந்துச்சு"..லிவிங் டுகெதர் தம்பதி எடுத்த விபரித முடிவு.. சென்னையில் பரபரப்பு..!

MAN, NATIONAL SECURITY ADVISER, AJIT DOVAL, RESIDENCE, அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்