இன்ஸ்டாவில் இளைஞர்களை Follow செய்த காதலி.. கோபத்துல இளைஞர் எடுத்த முடிவு.. நவராத்திரி திருவிழாவில் நடந்த திக்.திக்..சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாக்பூரில் தனது காதலியின் இன்ஸ்டாகிராம் ப்ரோபைலை கண்காணித்த இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. பார்க்கிங் லைன்-அ விட்டு 3 இஞ்ச் தள்ளி நின்ன கார்.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் அதிர்ந்துபோன உரிமையாளர்..!

போன்கால்

நாக்பூரின் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஹன் சிங் கபூர். இவருக்கு 22 வயதாகிறது. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு ராம்தாஸ்பேத் பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற துர்கா பூஜை பந்தலுக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்தபடி தனது சகோதரர் வீர்பால் சிங் கபூருக்கு போன் செய்திருக்கிறார். போனில் தனது சகோதரர் சொல்லிய விஷயத்தை கேட்ட வீர்பாலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ரோஹன் சிங் கபூர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். நாளடைவில் இது காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில், அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில இளைஞர்களையும் பின்தொடர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த ரோஹன் சிங் ஆபத்தான போதை பொருட்களை உட்கொண்டிருக்கிறார். இதனையடுத்து நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள ராம்தாஸ்பேத் பகுதிக்கு சென்றிருக்கிறார் அவர்.

சோகம்

அங்கிருந்தபடி தனது சகோதரர் வீர்பாலுக்கு போன் செய்து நடந்ததை கூறியிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வீர்பால் தனது சகோதரரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் ரோஹன் சிங் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அடுத்தநாள் அதாவது செவ்வாய்க்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி ரோஹன் மரணமடைந்திருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சீதாபுல்டி காவல் நிலைய அதிகாரிகள்,"தனது காதலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு சில இளைஞர்களை பின்தொடர்ந்து வந்ததை அறிந்து, அபாயகரமான போதை பொருளை உட்கொண்டதாக வீர்பாலிடம் சொல்லியிருக்கிறார் ரோஹன். இது தவிர அவருக்கு கடன் பிரச்சனையும் இருந்திருக்கிறது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த ரோஹனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். இதுகுறித்த விசாரணை துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | "நீ வந்து கூட்டிட்டு போய்டு".. மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல கணவனுக்கு தெரியவந்த திடுக்கிடும் உண்மை..!

MAN, GIRL FRIEND, INSTAGRAM PROFILE, இளைஞர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்