"நாங்க ராஜவம்சம் பேபி".. இளைஞரின் உலக மகா உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு வந்த சோதனை.. காப்பு மாட்டிய போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என பொய் கூறி பல பெண்களிடம் பணம் பறித்ததாக சொல்லப்படும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

"நாங்க ராஜவம்சம் பேபி".. இளைஞரின் உலக மகா உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு வந்த சோதனை.. காப்பு மாட்டிய போலீஸ்..!
Advertising
>
Advertising

இணையமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பல முக்கியமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. சொல்லப்போனால் இதன்மூலம், மனிதகுலம் பல மகத்தானை சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை மோசமான வழிகளில் பயன்படுத்தும் கும்பல்களும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன. பிறரது கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை திருடுவது, ரகசிய தகவல்களை ஹேக் செய்வது என சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

அந்தவகையில் அண்மையில் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். தன்னை புக்ராஜ் தேவாசி என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர் தான் ராஜஸ்தான் அரச குடும்பதை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சாட் செய்திருக்கின்றனர். இப்படி நண்பர்களாக பழகிய நேரத்தில் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியிருக்கிறார் புக்ராஜ் தேவாசி. அந்த பெண்ணும் அவரது காதலை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதனிடையே, பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை கேட்டுப் பெற்றிருக்கிறார் அந்த இளைஞர்.

ஒருநாள் பணம் கேட்டு மெசேஜ் செய்திருந்த அந்த இளைஞர், பணம் கொடுக்கவில்லை என்றால் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண்ணும் பணத்தை அளித்திருக்கிறார். கொஞ்ச நாளில் மீண்டும் புக்ராஜ் தேவாசி பணம் கேட்டிருக்கிறார். இதனால் கவலையில் இருந்த அந்த பெண் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசார் புக்ராஜ் தேவாசியை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தன்னை ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறி பல பெண்களிடம் அவர் பணம் பறித்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுத்து அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

POLICE, MUMBAI, RAJASTHAN, DYNASTY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்