'மட்டன் சூப்' ஜூலிய பாத்தே ஆகணும்'...'திடீரென இளைஞர் காட்டிய கிலி'...பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கியது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். இவருக்கும் ராய் தாமஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஜூலிக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், ஜூலியின் குடும்பத்தில் கடந்த 14 ஆண்டுகளாக, சிலர் தொடர்ந்து உயிரிழந்து வந்தனர். சில ஆண்டுகள் இடைவெளியில் இந்த மரணங்கள் நடைபெற்றதால் யாருக்கும் இதில் சந்தேகம் வரவில்லை.

கடந்த 2002ம் ஆண்டு ஜூலியின் மாமியார் அன்னம்மாவில் தொடங்கிய இந்த மர்ம மரணம், மாமனார் டாம் தாமஸ்(2008), கணவர் ராய் தாமஸ்(2011), அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ(2014) என தொடர்ந்தது. ஜூலி மாமனாரின் அண்ணன் மகன் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தை 2016இல் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் இந்த மரணங்களில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த டாம் தாமஸின் இளைய மகன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஜூலி மாமனாரின் அண்ணன் மகனான சாஜூவை விரும்பிய ஜூலி, அவரை திருமணம் செய்துகொள்வதற்காகவும், சொத்துகளை அடைவதற்காகவும் இந்த பாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவதை ஜூலியின் குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை ஆயுதமாக பயன்படுத்திய ஜூலி, குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதன் மூலம் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில்  கைது செய்யப்பட்ட ஜூலியை மருத்துவ பரிசோதனைக்காக கொயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அங்கு ஜூலியை காண்பதற்ககாக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஜூலியின் முகத்தை துணியால் மூடி காவல்துறையினர் அழைத்து சென்ற நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவர் திடீரென அவரது முகத்தில் இருந்த துணியை அகற்றினார்.

காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்புடன் ஜூலியை அழைத்து சென்ற போதும், திடீரென நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் எதற்காக இதனை செய்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

KERALA, KOODATHAI MURDER CASE, JOLLY, MEDICAL EXAMINATION, SHAJU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்