‘40 பைசா அதிகமா வாங்கிட்டாங்க’.. ஹோட்டல் மீது வழக்கு தொடுத்த நபர்.. அபராதம் விதித்து நீதிபதி சொன்ன முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவகம் ஒன்றில் தன்னிடம் 40 பைசா அதிகமாக வசூலித்ததாக முதியவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முதியவரான மூர்த்தி. இவர் சென்ட்ரல் தெருவில் உள்ள உணவகத்திற்கு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் சென்றுள்ளார். அங்கு அவர் வாங்கிய உணவுப் பார்சலுக்கு வரியுடன் சேர்த்து ரூ.264.60 பில் தொகை வந்துள்ளது. இதனை அடுத்து உணவக ஊழியர் அவரிடம் ரூ.265 வசூல் செய்தனர்.
இதில் ஆத்திரமடைந்த அவர், தன்னிடம் 40 பைசா கூடுதலாக வசூலித்துள்ளதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஊழியர்கள் எவ்வளவோ சமரசம் செய்ய முயன்றும் அவர் சமாதானம் அடையவில்லை. இறுதியாக இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் மூர்த்தி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை 8 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, வழக்கில் தானே நேரடியாக ஆஜராகி மூர்த்தி வாதாடினார். உணவகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். ஒரு பொருளுக்கு வரி விதிக்கும்போது, தொகையை முழுமை (ரவுண்ட் ஆஃப்) செய்து வசூலிக்க வருமான வரிச் சட்டம் 2017-ல் உள்ள 170-வது பிரிவு அனுமதிக்கிறது என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சுற்றறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், பில் தொகை வரும்போது 50 பைசாவுக்கும் குறைவாக இருந்தால் அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். 50 பைசாவுக்கு மேல் வந்தால் அதற்கு அடுத்த முழுமையான ரூபாயில் அதை ரவுண்ட் ஆஃப் செய்து நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக நீதிபதி கூறினார்.
மேலும், மனுதாரர் சுய விளம்பரம் கருதி இந்த வழக்கை தொடுத்திருப்பதாக நீதிமன்றம் கண்டித்தது. இதனை அடுத்து உணவக நிர்வாகத்திற்கு ரூ.2000 மற்றும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக ரூ.2000 என மொத்தம் ரூ.4000 மூர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை 30 நாட்களுக்குள் செலுத்து வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு .. பொதுமக்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள்.. பாதுகாப்பு பணியில் காவல் துறை!
- ஒரே நாள்ல 81 பேருக்கு மரண தண்டனை.. எந்த நாட்டுல? எதுக்காக தெரியுமா?
- கண்டெக்டருக்கு வந்த புது பிரச்னை.. பலா பழத்துக்கு ஏன் லக்கேஜ் டிக்கெட் போடலை.. வீடு தேடி வந்த நோட்டீஸ்!
- #Breaking:அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு மரண தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!
- திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மரணத்திற்கு பின் மறுபிறவி.. உருக்கமான முடிவு
- கோலியோட ‘100-வது’ டெஸ்ட்.. பிசிசிஐ போட்டுள்ள ‘சூப்பர்’ ப்ளான்?.. இதுமட்டும் நடந்த வேறலெவலா இருக்குமே..!
- ஐயோ, நம்ம வீடியோ 'பார்ன் சைட்'ல இருக்கு டா.. யாருடா இப்படி பண்ணினது? கண்ணீரில் காதல் ஜோடி.. என்ன நடந்தது?
- பெங்களூருவில் 426 பேரின் உயிரை காத்த 42 வயது ஹீரோ.. 3000 அடி உயரம்.. கடைசி நேரத்தில் பறந்த மெசேஜ்
- யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது..? நீதிபதி சரமாரி கேள்வி..!
- நீங்க தான் என் அம்மாவா? 22 வருஷம் எங்கம்மா போயிட்ட? கண்ணீர் வரவழைக்கும் பாசக்கதை