300 ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் நடந்து சென்ற தம்பதியிடம் 300 ருபாய் கேட்டு மிரட்டிய நபரை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொலை செய்ததாக காவல் துறை தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

Advertising
>
Advertising

ஓட்டுக்கு கொடுத்த தங்க நாணயம்.. அடகுக் கடையில் தெரிய வந்த உண்மை.. வேட்பாளரின் கணவர் கூறிய தகவல்

வழிப்பறி

டெல்லியின் ராம்புராவின் ஹரி நகர் பகுதியை சேர்ந்தவர் ராம் கிஷோர். 20 வயதான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. மேற்கு டெல்லியின், பிரயோக் விஹார் பகுதியில் தனது மனைவி உடன் வசித்துவரும் ராம் மோமோ கடை ஒன்றினை நடத்திவருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ராம் வெளியே சென்று இருக்கிறார். அப்போது இந்த தம்பதியை வழிமறித்து பணம் கேட்டு ஒருவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. அப்போது ராம் பணம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்ததால் அவரை வழிப்பறி செய்த நபர் கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராமை கொலை செய்துவிட்டு அவரது மொபைல் போன் மற்றும் பர்ஸை வழிப்பறி ஆசாமி கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னணி என்ன?

அஸ்ஸாமின் சோனிதாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ் தாஸ். டெல்லிக்கு வந்த இவர் வேலை இன்றி தெரு ஓரங்களில் வசித்து வருவர் எனச்சொல்லப்படுகிறது. இந்நிலையில், இவர் தான் ராம் மற்றும் அவரது மனைவியிடம் வழிப்பறி செய்ய முயற்சித்து, ராமை கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள ஜஸ்ஸா ராம் பூங்காவிற்கு தனது மனைவி நைனாவுடன் சென்று இருக்கிறார் ராம். அப்போது அங்கு வந்த தாஸ், கத்தியுடன் ராமிடம் சென்று 300 ரூபாய் தரும்படி கேட்டிருக்கிறார். கொடுக்க முடியாது என ராம் பதில் அளித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் ராமின் கழுத்தில் கத்தியால் தாஸ் வெட்டியதக தெரிகிறது. இதனால் அங்கேயே ராம் சரிந்து விழுந்திருக்கிறார். உடனே, ராமின் போன் மற்றும் பர்சினை எடுத்துக்கொண்டு தாஸ் தப்பிச் சென்று இருக்கிறார்.

கைது

நைனா இந்த சம்பவம் குறித்து தனது உறவினர்களுக்கு தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த ராமின் சகோதரர், அவரை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், முன்னரே ராம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய கூடுதல் டிசிபி பிரஷாந்த்," இந்திய அரசியலமைப்பு சட்ட என் 302 மாற்றும் 397 ஆகிய பிரிவுகளின் கீழ், கொலை குற்றம் மற்றும், திருடுவதற்காக கொலை முயற்சி செய்தல் அல்லது கடுமையாக தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்துவிட்டோம். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன" என்றார்.

300 ரூபாய்க்காக டெல்லியின் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது டெல்லியையே உலுக்கியுள்ளது.

ஜன்னல் இடுக்குகளில் ஒட்டப்பட்டிருந்த டேப்.. காற்று வெளிய போகக் கூடாது.. வீட்டுக்குள்ள இருந்த 4 பேர்.. குடும்பத்தோடு சாப்ட்வேர் என்ஜினீயர் எடுத்த சோக முடிவு

MAN, DEATH, DISPUTE, DELHI, மனைவி, வழிப்பறி, கொலை, டெல்லி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்